தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கை மீறிப் போகும் தேனி.. கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மாநிலத்திலேயே 3வது இடம்.. ஷாக்!

ஒபிஎஸ்சின் சொந்த ஊரில் கொரோனா கைமீறிவிட்டதா? மாநிலத்தில் 3வது இடம்.. அச்சத்தில் மக்கள்

Google Oneindia Tamil News

தேனி: தேனியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக மோசமாகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தொட்டுள்ளது. பாதிப்பு . மாநிலத்திலேயே அதிக நோயாளிகள் உள்ள 3வது மாவட்டமாக தேனி மாறி உள்ளது. செங்கல்பட்டு , காஞ்சிபுரத்தையும் நோயாளிகள் எண்ணிக்கையில் முந்தியுள்ளது.

கேரளாவின் எல்லையை ஒட்டிய மிக அற்புதமான இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டம் தேனி. இந்த மாவட்டத்தில் படித்து முடித்த பட்டதாரிகள் பெரும்பாலானோர் சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் பணியாற்றுகிறார்கள்

இந்நிலையில் கொரோனா பாதிப்பு தேனியில் ஆரம்பத்தில் கட்டுபபாட்டில் இருந்தது. முதல் லாக்டவுன் போடப்பட்ட ஏப்ரல் மாதத்தில் பாதிப்பு அதிகரித்த நிலையில் அதன்பிறகு படிப்படியாக குறைந்தது. ஒருகட்டத்தில் பாதிப்பு இல்லாத நகரம் என்கிற நிலையை எட்டியது. ஆனால் இந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. சுமார் 20 நாட்களுக்கு மேல் யாருக்கும் தொற்று ஏற்படாமல் இருந்தது. தொற்றுபாதிப்பில் இருந்து முற்றிலும் மீண்டது. ஆனால் மீண்டமகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மீண்டும் தொற்று பரவ ஆரம்பித்தது.

தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் போக பிளான் இருக்கா? கர்நாடக அரசு ரூல்சை பாருங்கள்தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் போக பிளான் இருக்கா? கர்நாடக அரசு ரூல்சை பாருங்கள்

சென்னை லாக்டவுன்

சென்னை லாக்டவுன்

மே மாதத்தில் மிக குறைவாக பாதிக்கப்பட்டிருந்தனர். 3ம் தேதி நிலவரப்படி 44 ஆக இருந்த பாதிப்பு அடுத்த ஒரு மாதத்தில், அதாவது ஜூன் 2ம் தேதி அன்று 114 ஆக அதிகரித்தது. ஆனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அப்போது சுமார் ஆயிரம் என்கிற அளவில் பரவிக்கொண்டிருந்தது. ஜூன் 21ம் தேதி 200ஐ தொட்டது தேனி. ஆனால் சென்னையில் அப்போது லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் பலர் சொந்த ஊருக்கு படை எடுத்து வந்தனர். இதன்விளைவாக அடுத்த 10 நாளில் அதாவது
ஜூலை 1ம்தேதி இந்த எண்ணிக்கை 736 ஆக அதிகரித்தது. ஜூலை 13ம் தேதி இந்த எண்ணிக்கை 1368 ஆக இருந்தது. ஜூலை 26ம் தேதி இந்த எண்ணிக்கை 3773 ஆக உயர்ந்தது. அன்று தேனியில் 216 பேருக்கு தொற்று பரவி இருந்தது. அதன்பிறகு நிலைமை மிக மோசமாக மாற தொடங்கியது. அடுத்த 13 நாளில் அதாவது நேற்றைக்கு ஆகஸ்ட் 9ம் தேதி நிலவரப்படி 7898 ஆக உயர்ந்தது. இன்றைய கணக்கை சேர்ந்தால் நிச்சயம் 8 ஆயிரத்தை தாண்டி இருக்கும்.

தேனியில் 8 ஆயிரம் பேர்

தேனியில் 8 ஆயிரம் பேர்

தற்போதைய நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதல் இடத்தில் இருக்கிறது. சென்னையில் ஒரு கோடி மக்கள் உள்ள நிலையில் அங்கு 109117 பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் தேனி மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையே 12.5 லட்சம் தான். இங்கு 8 ஆயிரம் பாதிப்பு என்பது மிக அதிகம் ஆகும்.

தேனி 3வது இடம்

தேனி 3வது இடம்

ஒருமுறை மாவட்ட வாரியான சோதனை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சென்னைக்கு அடுத்தபடியாக தேனியில் அதிக சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பபட்டது. இந்நிலையில் இப்போது சோதனை எண்ணிக்கை எவ்வளவு என்பதும் தெரியவில்லை. தற்போது கொரோனா நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டஙகள் பட்டியலில் சென்னை முதல் இடத்தில் இருக்கிறது. சென்னையில் 11654 பேர் உள்ளார்கள். 89 சதவீதம் பேர் குணம் அடைந்துவிட்டனர். சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 3513 பேர் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3வது இடத்தில் தேனி இருக்கிறது. தேனியில் 3014 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கம்பம், தேனியில் அதிகம்

கம்பம், தேனியில் அதிகம்

மதுரையில் கூட தற்போது 1265 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மிகச்சிறிய மாவட்டமான தேனியில் நிலைமை மிக மோசமாக இருப்பது தெரிகிறது. ஒவ்வொரு நாளும் தெற்று பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 300 என்கிற அளவில் இருக்கிறது. தேனி மாவட்டத்தில் கம்பம், பெரியகுளம், தேனி, போடியில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

நகரங்கள் சீல் வைப்பு

நகரங்கள் சீல் வைப்பு

தேனி மாவட்டத்தின் குக்கிராமங்கள் பலவற்றுக்கும் தொற்று பரவி உள்ளது. ஆனால் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. சோதனை செய்து கொண்டால் எங்கே கொரோனா முகாமில் போட்டுவிடுவார்களோ என்று பலர் சோதனைக்கு செல்ல மறுக்கிறார்கள். தேனி, பெரியகுளம், போடி, கம்பம் உள்பட நான்கு நகராட்சியிலும் பல தெருக்கள் கட்டைகளால் முழுமையாக அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தொற்று மிக அதிகம்

தொற்று மிக அதிகம்

துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். தேனியில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
The number of corona victims in Theni has touched 8,000 . daily cases rised to 300.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X