• search
தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தேனியில் சிக்கிய அதிமுக பிரமுகர்.. அரசு நிலத்தை பட்டா போட்டவர்கள் கலக்கம்.. ஆக்சனில் ஸ்டாலின் அரசு

Google Oneindia Tamil News

தேனி: சத்தமே இல்லால் ஆக்சனில் இறங்கி உள்ளது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.. கடந்த 10 வருடங்களில் புறம் போக்கு நிலங்களை பட்டா போட்ட பல்வே கட்சிகளின் முக்கிய விஐபிக்கள் கலக்கத்தில் உள்ளார்கள். அத்துடன் உடந்தையாக இருந்த அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளார்கள்.

தேனியில் 100 ஏக்கர் அரசு நிலத்தை மோசடியாக பட்டா மாறுதல் செய்ய தேனி அதிமுக நிர்வாகிக்கு உதவியதாக நான்கு தாசில்தார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட நிலத்தின் ஆவண பதிவினை ஆய்வு செய்துள்ள தேனி மாவட்ட ஆட்சி தலைவர் முரளிதரன் , மோசடி உறுதி செய்யப்பட்டால் குறிப்பிட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை..3 நாட்களுக்கு நீடிக்கும் - வானிலை சொன்ன நல்ல செய்தி தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை..3 நாட்களுக்கு நீடிக்கும் - வானிலை சொன்ன நல்ல செய்தி

ஆட்சி மாற்றத்திற்கு திமுக அரசு அதிரடியான நடவடிக்கையை தொடங்கி உள்ளது. கடந்த 2011ல் முதல்வர் ஜெயலலிதா நில அபகரிப்பு தடுப்பு பிரிவு என்ற சட்டத்தை கொண்டு வந்து திமுக முக்கிய நிர்வாகிகள் பலரை கைது செய்த சிறையில் அடைத்தார். ஏரளமான நிலங்களையும் பறித்தார்.

 டார்கெட் விஐபிக்கள்

டார்கெட் விஐபிக்கள்

அந்த வரலாறு சரியாக 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரும்புகிறது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அரசு நிலங்களை அதாவது புறம்போக்கு நிலங்களை கடந்த 10 ஆண்டுகளில் ஆக்கிரமித்த அதிமுக உள்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களை டார்கெட் செய்து களம் இறங்கி உள்ளது. இதேபோல் கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்தவர்களையும் டார்கெட் செய்து களம் இறங்கி உள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

இதனால் தமிழகம் முழுவதும் அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் அவர்களுக்கு உதவியாக இருந்த அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெங்களூரு நெடுஞ்சாலையில் அண்மையில் அரசுக்கு சொந்தமான 200 கோடி மதிப்பிலான 32 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இதேபோல் சென்னையில் ஜேபிஆருக்கு சொந்தமான தனியார் கல்லூரியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. இதேபோல் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பல்வேறு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.

முக்கிய நிலம்

முக்கிய நிலம்

தஞ்சை நகரின் மையப்பகுதியில் தனியார் கட்டுப்பாட்டில் இருந்த மாநகராட்சிக்குச் சொந்தமான சுமார் ரூ.150 கோடி மதிப்புடைய முக்கிய இடங்கள் அண்மையில் மீட்கப்பட்டது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் அதிரடியாக மீட்கப்பட்டு வருகிறது.

வருவாய்துறை நிலம்

வருவாய்துறை நிலம்

இந்த சூழலில் தேனியை அடுத்த வடவீரநாயக்கன்பட்டி கிராமம் அருகே கலெக்டர் அலுவலக குடியிருப்பு, பல்துறை பெருந்திட்ட வளாகம், ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கிராமத்திற்கு சொந்தமான 100 ஏக்கருக்கு மேல் அரசு நிலங்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியின் போது வருவாய்துறை நிலம் தொடர்பான பதிவேடு ஆவணத்தில் பட்டா மாறுதல், திருத்தம் செய்ய கோட்டாட்சியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பத்திரப்பதிவு

பத்திரப்பதிவு

இதை பயன்படுத்தி குறுவட்ட நில அளவர், வட்டாட்சியர். கோட்டாட்சியர் உள்பட அதிகாரிகளுடன் துணையுடன் தேனி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை பெரியகுளம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் அவரது பெயரிம் அவரது தந்தை வீரணத்தேவர் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் பட்டா மாறுதல் செய்திருப்பதாக புகார் எழுந்தது. இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளும் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு பட்டா மாறுதல் செய்து தந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த நிலங்கள் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு வட்டாட்சியர் அனுமதியோடு பத்திரப்பதிவு நடைபெற்றுவிட்டது எனப் புகார் எழுந்தது.

கலெக்டர் உத்தரவு

கலெக்டர் உத்தரவு

இது குறித்து சப்--கலெக்டர் ரிஷப் விசாரித்தார். அதில் தாசில்தார்கள் கிருஷ்ணகுமார் (பெரியகுளம்), ரத்தினமாலா (போடி சமுகநல பாதுகாப்புத் திட்டம்), தேர்தல் துணை தாசில்தார்கள் மோகன்ராம் (போடி), சஞ்சீவ்காந்தி (ஆண்டிபட்டி) உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் நால்வரையும் சப்--கலெக்டர் பரிந்துரையில், கலெக்டர் முரளீதரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் கூறுகையில், முதற்கட்ட விசாரணை முடிந்து சஸ்பெண்ட செய்துள்ளோம். துறை ரீதியான விளக்கம் கேட்கப்படும். சட்ட நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும்.'' என்றார்.

English summary
Four thasithars have been suspended for allegedly helping Theni AIADMK executive to fraudulently transfer 100 acres of government land in Theni.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X