தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விண்வெளி வீராங்கனையாக விரும்பும் தேனி கிராமத்து பெண்.. ரூ 50 லட்சம் நிதியுதவியை நாடும் உதயகீர்த்திகா

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்ட கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கனடாவில் பைலட் பயிற்சி பெற உதவி கோரியுள்ளார். இதன் மூலம் அவர் விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.

தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த ஓவியர் தாமோதரன்- அமுதா தம்பதியின் மகள் உதய கீர்த்திகா. உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நேஷனல் ஏர் ஃபோர்ஸ் யூனிவர்சிட்டி அந்த நாட்டு விமான படை பல்கலைக்கழகத்தில் ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் என்ஜீனியரிங் படித்துள்ளார்.

பிரதமர் படைத்துள்ள மற்றொரு சாதனை.. உலகளவில் மோடி தான் டாப்.. 7 கோடியை தாண்டிய ட்விட்டர் ஃபாலோயர்ஸ்பிரதமர் படைத்துள்ள மற்றொரு சாதனை.. உலகளவில் மோடி தான் டாப்.. 7 கோடியை தாண்டிய ட்விட்டர் ஃபாலோயர்ஸ்

இவர் 92.5 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். போலந்து விண்வெளி பயிற்சி மையத்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்த பயிற்சிக்கு தேவையான பண உதவி இல்லாமல் தவித்து கொண்டிருந்தார்.

பைலட் பயிற்சி

பைலட் பயிற்சி

இதையடுத்து அவருக்கு ஏராளமானோர் உதவி செய்தனர். இதையடுத்து போலாந்தில் 10 கட்ட பயிற்சியையும் முடித்த அவருக்கு மீண்டும் பணத்தேவை ஏற்பட்டுள்ளது. கனடாவில் உள்ள பைலட் பயிற்சி மையத்தில் சேர அனுமதி கிடைத்துள்ளது.

பணம் புரட்ட

பணம் புரட்ட

அங்கு செல்ல ரூ 50 லட்சம் வரை தேவைப்படும். இத்தகைய பணத்தை புரட்ட முடியாத நிலையில் உதய கீர்த்திகா உள்ளார். இதனால் அவர் சமூக ஆர்வலர்களின் உதவியை உதய கீர்த்திகா எதிர்பார்த்து காத்துள்ளார். விண்வெளியில் இருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்வது, விண்வெளியில் எவ்வாறு தரையிறங்குவது, எந்த இடத்தை தரையிறங்குவது, எந்த இடத்தை தரையிறங்க தேர்வு செய்வது, விண்வெளியில் இருக்கும் சமயங்களில் உடல்நிலையை எவ்வாறு சீராக வைத்து கொள்வது உள்ளிட்ட பயிற்சிகள் கனடாவிலுள்ள பயிற்சி மையத்தில் வழங்கப்படவுள்ளன.

50 லட்சம் ரூபாய்

50 லட்சம் ரூபாய்

இந்தப் பயிற்சியை முடித்த பின்னர் அடுத்த கட்ட பயிற்சிகளுக்கு பிறகு விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நிலையில்தான் இந்த பயிற்சியில் சேருவதற்கு சுமார் 50 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும் நிலையில் இந்த பயிற்சியை பெற பணம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

கல்பனா சாவ்லா

கல்பனா சாவ்லா

இந்த நிலையில் ஆர்வலர்கள் கொடுத்த 4 லட்சம் பணத்தையும் கொரோனாவால் உணவின்றி தவிப்போருக்கு உதவிவிட்டார். தற்போது மத்திய மாநில அரசுகள் தனக்கு உதவினால் கல்பனா சாவ்லாவுக்கு அடுத்து விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்படுவேன் என கூறியுள்ளார்.

English summary
Theni Village girl seeks help to study pilot training course in Canada.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X