தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேனியில் உச்சகட்ட போட்டி.. அசரடிக்கும் மும்முனை மோதல்.. உண்மையான களநிலவரம் என்ன தெரியுமா?

தேனி லோக்சபா தொகுதியில் ஸ்டார் வேட்பாளர்கள் அதிகம் போட்டியிடுவதால் அது மிக முக்கியமான தொகுதியாக மாறி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Theni Lok sabha constituency: மும்முனை போட்டியில் தேனி தொகுதி- வீடியோ

    தேனி: தேனி லோக்சபா தொகுதியில் ஸ்டார் வேட்பாளர்கள் அதிகம் போட்டியிடுவதால் அது மிக முக்கியமான தொகுதியாக மாறி இருக்கிறது.

    லோக்சபா தேர்தலில் சில தொகுதிகள் பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறும். தேனி தொகுதியும் அப்படித்தான் இந்த லோக்சபா தேர்தலில் மிக முக்கியமான தொகுதியாக மாறி உள்ளது.

    தேனியில் பெரிய கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் எல்லோருமே மிக மிக முக்கியமான வேட்பாளர்கள். எந்த கட்சிக்கு மக்கள் எவ்வளவு ஆதரவு தருகிறார்கள் என்பது இந்த ஒரு தொகுதியை வைத்தே கூட சொல்லி விடலாம்.

     தேர்தல் வந்துட்டா போதும்.. சின்ராசுகள் டீ குடிக்கக் கிளம்பி விடுகிறார்கள்! தேர்தல் வந்துட்டா போதும்.. சின்ராசுகள் டீ குடிக்கக் கிளம்பி விடுகிறார்கள்!

    முக்கியம் ஏன்

    முக்கியம் ஏன்

    தமிழகத்தில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியும் தமிழிசையும் நேருக்கு நேர் மோதுகிறார்கள். அதேபோல் சிவகங்கையில் எச்.ராஜா, கார்த்தி சிதம்பரம், சினேகன் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகிறார்கள். இந்த இரண்டு தொகுதிகளும் ஸ்டார் வேட்பாளர்கள் அதிகம் போட்டியிடும் தொகுதிகள் ஆகும். அதேபோல்தான் தேனி தொகுதியும் அதிகம் ஸ்டார் வேட்பாளர்கள் களமிறங்கும் தொகுதியாக மாறியுள்ளது.

    யார் எல்லாம் போட்டி

    யார் எல்லாம் போட்டி

    லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் அமமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார்.

    தங்க தமிழ்செல்வன் போட்டி

    தங்க தமிழ்செல்வன் போட்டி

    தங்க தமிழ்செல்வன் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டித் தொகுதியில் தங்க தமிழ்செல்வன் மீண்டும் போட்டியிடுவார் என்று தகவல்கள் வந்தது. 2016 சட்டமன்ற தேர்தலில் இவர் அங்குதான் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடவில்லை.

    மாஸ் தேர்வு

    மாஸ் தேர்வு

    அதற்கு பதிலாகத்தான் தற்போது லோக்சபா தேர்தலில் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். டிடிவி தினகரன் பல்வேறு திட்டங்களோடு தங்க தமிழ்செல்வனை இங்கு களமிறக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த தங்க தமிழ்செல்வன் உள்ளூரில் பெரிய அளவில் பிரபலமானவர். தேனி முழுக்க எல்லோருக்கும் தெரிந்த வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்தான். இது அமமுக கட்சிக்கு பெரிய பலமாக இருக்கும்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏவாக மக்களுக்கு பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள். எம்எல்ஏவாக வந்து பெரிதாக மக்களுக்கு நல்லது செய்வார் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு, தங்க தமிழ்செல்வன் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. எப்படி இருந்தாலும் அதிமுகவின் மிக அதிகமான வாக்குகளை தங்க தமிழ்செல்வன் பிரிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்து யார்

    அடுத்து யார்

    தேனியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது வலுவான இடமான ஈரோட்டில் இருந்து மாறி தற்போது தேனியில் போட்டியிடுவதே பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முடிவால் அதிகம் ஆச்சர்யப்பட்டது தேனி மக்கள்தான் என்று கூற வேண்டும்.

    பலம் என்ன

    பலம் என்ன

    தேனியின் காங்கிரஸ் கொஞ்சம் வலுவான கட்சி, கேரளா அருகே இருப்பதால், அங்கு இருக்கும் காங்கிரஸ் தாக்கம் இங்கும் இருக்கிறது. அதேபோல திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவும் கணிசமாக கிடைக்கும். இதனால் தேனியில் மிக முக்கியமான இன்னொரு ஸ்டார் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மாறியுள்ளார். ஆனால் முல்லைப்பெரியாறு பிரச்சனையில் காங்கிரஸ் கேரளாவில் ஒரு போல பேசுவதும், தேனியில் வேறு மாதிரி பேசுவதும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    அதிமுக வேட்பாளர்

    அதிமுக வேட்பாளர்

    லோக்சபா தேர்தலில் தேனியில் அதிமுக சார்பாக ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். இவருக்கு இப்போதே ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார். தேனி ஓ.பன்னீர்செல்வமின் சட்டமன்ற தொகுதி என்பதால் அங்கு அவரின் மகன் ரவீந்திரநாத் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் ரவீந்திரநாத் மிக முக்கியமான வேட்பாளராக மாறி இருக்கிறார்.

    மாஸ் பிரச்சாரம்

    மாஸ் பிரச்சாரம்

    இவர் என்னதான் 18 வயதில் இருந்து அதிமுகவில் இருந்தாலும் பெரிய அளவில் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதோ இப்போது இவர் தேர்தலில் நின்ற பின்தான் அங்கு தொகுதி மக்களுக்கு இவர் பெரிய அளவில் அறிமுகமாகி இருக்கிறார். ஆனால் இவருக்காக பாஜக தேசிய தலைவர்கள் எல்லாம் வந்து பிரச்சாரம் செய்வது பெரிய போட்டியை உருவாக்கி இருக்கிறது.

    சர்ப்ரைஸ்

    சர்ப்ரைஸ்

    இதில் யாரும் கவனிக்காத இன்னொரு முக்கியமான வேட்பாளர்தான், மக்கள் நீதி மய்யம் தேனி வேட்பாளர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். இவர் அதிக அளவில் திமுக வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாவட்டம் மாறி போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பின்னடைவை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.

    English summary
    Theni Constituency becomes a tough turf after three major candidates facing each other.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X