தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 மாத சிசு.. கர்ப்பிணியை வயிற்றிலேயே எட்டி உதைத்து கொன்ற கணவனுக்கு தூக்கு.. தேனி கோர்ட் அதிரடி

மனைவியை கொன்ற கணவனுக்கு தூக்கு தண்டனை தரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

தேனி: "தாலிக்கயிற்றால் அவள் கழுத்தை இறுக்கினேன்.. 5 மாத கர்ப்பிணி என்று தெரிந்தும் வயிற்றிலேயே எட்டி உதைத்து கொன்றேன்" என்று 2-வது கல்யாணம் செய்து கொள்ளும் ஆசையில் மனைவியை கொன்ற கணவன் வாக்குமூலம் அளித்திருந்தார்.. இது சம்பந்தமான வழக்கில், கொலை செய்த கணவனுக்கு தேனி கோர்ட் தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Recommended Video

    தேனி: கர்ப்பிணியை கொன்ற கல்நெஞ்ச கணவன்: தூக்குக்கு அனுப்பிய சபாஷ் நீதிமன்றம்!

    கடந்த 2015ம் ஆண்டு, ஜூலையில் நடந்த சம்பவம் இது:

    தேனி மாவட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவராக இருந்தவர் சுரேஷ்.. 31 வயதாகிறது.. மனைவி பெயர் கற்பகவள்ளி.. 19 வயதாகிறது.. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள்... சின்னமனூர் காந்திநகர் காலனியில் குடியிருந்தனர்.

    அப்போது கற்பகவள்ளி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.. ஒருநாள் திடீரென கற்பகவள்ளி தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றதாக சொல்லி, சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை அளிக்கும்போதுதான் தெரிந்தது கற்பகவள்ளிக்கு அதிக அளவு ரத்த போக்கு இருந்தது. அதனால், உடனடியாக மேல் சிகிச்சைக்காக தேனி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    சிகிச்சை

    சிகிச்சை

    ஆனால் சிகிச்சை பலனின்றி கற்பகவள்ளி இறந்துவிட்டார். இதையடுத்து, தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கற்பகவள்ளியின் அப்பா நல்லதம்பி சின்னமனூர் போலீசில் புகார் தந்தார்.. இது சம்பந்தமான விசாரணையும் ஆரம்பமானது.. அப்போது போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர்கள், அடித்து கொன்றிருப்பற்கான தடயம் இருப்பதாக சொன்னார்கள்.. இதையடுத்து, சுரேஷிடம் விசாரணை நடந்தது.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    அப்போதுதான், வாக்குமூலத்தில் பல விஷயங்களை சொல்லி அதிர வைத்தார். "கற்பகவள்ளி எனக்கு சரியான மரியாதை தருவதில்லை.. குடித்துவிட்டு வந்தால் சண்டை போடுகிறார்.. வரதட்சணை கேட்டும் முறையாக வந்து சேரவில்லை.. அவள் நடத்தையிலும் சந்தேகப்பட்டேன்.. 2வது கல்யாணம் செய்யவும் முடிவு செய்தேன்.. அதனால்தான், தாலி கயிற்றால் இறுக்கிகொன்றேன்.. வயிற்றில் எட்டி உதைத்தேன்.. அந்த 5 மாச கரு சிதைந்து போயிருக்கலாம்" என்றார்.

     மறுமணம்

    மறுமணம்

    தாய்மாமன் மகளை கல்யாணம் செய்த சுரேஷ், தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி வசதியான இடத்தில் 2வது கல்யாணம் செய்வதற்காக மனைவியை கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இது சம்பந்தமான வழக்கும் தேனி கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தற்போது அது முடிவடைந்துள்ளது.

     தூக்கு

    தூக்கு

    நீதிபதி அப்துல் காதர் இது தொடர்பான தீர்ப்பு வழங்கி உள்ளார்.. அதன்படி, நடத்தையில் சந்தேகப்பட்டு, கர்ப்பிணி மனைவியை கருச்சிதைவுக்கும் ஆளாக்கி கொன்ற சுரேஷூக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், சாகும் வரை தூக்கு என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    Theni Court sentences husband to death for killing 19 year old pregnant wife
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X