அரசு பேருந்தில் மாஸ்க் போடாதவர்களை வறுத்தெடுத்த தேனி ஆட்சியர்.. வீடியோ வைரல்!
தேனி: தேனியில் முகக்கவசம் அறியாதவர்களை தேனி மாவட்ட ஆட்சியர் அறிவே இல்லையா என கடுமையாக திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது..
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத் துறை சார்பில் தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் பதிமூன்றாவது மாபெரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம்கள் 386 மையங்களில் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர்.
வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா மட்டுமே.. ஓமிக்ரான் வதந்தி.. சுகாதார துறை செயலாளர்

முகாம்களில் ஆட்சியர் ஆய்வு
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வரும் தடுப்பூசி சிறப்பு முகாம்களை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. ஆண்டிப்பட்டி பேருந்து நிலைய பகுதிகளில் சாலைகளில் இன்று அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் மாஸ்க் அணிய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் மேலும் அவர்களை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

பேருந்து பயணிகளை திட்டிய ஆட்சியர்
தொடர்ந்து ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டி பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்தில் பயணம் செய்த பெரும்பாலானோர் முக கவசம் அணிய வில்லை இதனைக்கண்ட மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கோபத்தில் கடுமையாக திட்டினார்..

அபராதம் விதிக்க உத்தரவு
மேலும் தன்னுடன் வந்த அதிகாரிகளை அழைத்து அணியாதவர்களுக்கு அபராதம் போடுங்க பணம் இல்லேன்னா அட்ரஸ் வாங்கிவிட்டு வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி அபராதத்தை வசூல் பண்ணுங்க என கூறினார்.

மாவட்ட ஆட்சியருக்கு ஆதரவு
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்த தோடு உரிய விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் நிலையில் ஒரு புறம் கண்டனங்களும், மறுபுறம் பொதுமக்களின் உயிரை பாதுகாக்கும் நோக்கில் தானே ஆட்சியர் பேசியுள்ளார் என்ற ஆதரவும் ஒரே நேரத்தில் எழுந்துள்ளது..