தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அஜித் படத்தை வைத்து காவலன் ஆப் குறித்து காவல்துறை வெளியிட்ட மீம்ஸ்.. செம்ம வைரல்

Google Oneindia Tamil News

தேனி: காவலன் ஆப் குறித்து தேனி மாவட்ட காவல்துறையினர் வெளியிட்ட ஒரு மீம்ஸ் இன்று பயங்கரமாக வைரலாகி வருகிறது. அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இருந்த ஒரு காட்சியை வைத்து அந்த மீம்ஸ்யை வெளியிட்டு உள்ளார்கள்.

பெண்கள் மற்றும் முதியவர்கள் ஆபத்தான நேரங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்ள காவல் துறையை அழைப்பதற்காக தங்கள் செல்போனில் KAVALAN SOS APP' (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் என காவல் துறை தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்த பிறகு, அப்ளிகேஷனை ஓபன் செய்த உடன் பயனாளர்களின் வசதிக்கேற்ப ஆங்கிலம் / தமிழ் என்று இரு மொழிகள் இருக்கும். மொழியைத் தேர்வு செய்த பின்னர் ரிஜிஸ்டர் என்ற பட்டனை அழுத்த வேண்டும். ரிஜிஸ்டிரேஷன் (registration) என்ற பக்கத்தில், பயனாளர்கள் தங்கள் அலைபேசி எண், பெயர், மாற்று அலைபேசி எண் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். பின் நெக்ஸ்ட் (NEXT) பட்டனை அழுத்த வேண்டும். அதைத்தொடர்ந்து, உங்களின் முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்து சைன் அப் (sign up) என்ற பச்சை நிற பட்டனை அழுத்தினால் காவலன் ஆப்பை தாராளமாக பயன்படுத்தலாம்.

போலீஸ் உடனே வரும்

போலீஸ் உடனே வரும்

இந்தச் காவலன் ஆப்பை வைத்திருந்தால் பொதுமக்கள், தங்களுக்கு ஒரு பிரச்னை ஏற்படும் போது காவல்துறையைத் தொடர்புகொள்ள 100 என்ற எண்ணை டயல் செய்ய தேவையில்லை. இந்த ஆப்பில் உள்ள SOS பட்டனை அழுத்தினால் போதும். உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சென்று சம்பவ இடத்துக்குக் காவல்துறை ரோந்து வாகனம் விரைந்து வந்துவிடும்.

பெண்களிடை வரவேற்பு

பெண்களிடை வரவேற்பு

பெண்களுக்கு எதிராக குற்றச்சம்பங்கள் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையின் காவலன் ஆப் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் போன் வைத்துள்ள அனைத்து பெண்களை இந்த ஆப்பை டவுன்லோடு செய்ய வைப்பதற்காக காவல்துறை தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.

தேனி காவல்துறை

தேனி காவல்துறை

அந்த வகையில் தேனி மாவட்ட காவல்துறை விஸ்வாசம் படத்தில் அஜித் நயன்தாரா மற்றும் அனிகா இடையிலான ஒரு காட்சியை மீம் ஆக வைத்து வெளியிட்டுள்ளது. அதில் அனிகா, நயன்தாராவுக்கு போன் செய்து அம்மா என்னை யாரோ துரத்துராங்க என்கிறார். அதற்கு நயன்தாரா உன் மொபைல இருக்குற காவலன் எஸ்ஒஎஸ் ஆப் பட்டனை அழுத்து என்கிறார். அப்போது அஜித் படத்தை போட்டு போலீஸ் என காட்டுகிறார்கள். கடைசி படத்தில் அகினா, சரிமா என்கிறார். அதற்கு நயன்தாரா இனி உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்கிறார். இப்படியாக முடிகிறது அந்த மீம்ஸ்.

சீட் பெல்ட் போட்டிருப்பார்

இந்த மீம்ஸை பார்த்த அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். அஜித் பட காட்சியை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தியுள்ள தேனி மாவட்ட காவல்துறையின் செயலை அஜித் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர். அஜித் விஸ்வாசம் படத்தில் அனைத்து சண்டை காட்சிகளிலும் ஹெல் மெட் அணிந்தே சென்று இருப்பார். எவ்வளவு ஆபத்தான சூழலும் காரில் சீட் பெல்ட் போட்டுத்தான் ஓடடிச்செல்வார். இந்த காட்சிகளை பார்த்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் அப்போத அஜித்தை வெகுவாக பாராட்டினார்.

English summary
theni district police released memes for kavalan sos app with ajith's viswasam movie action scene
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X