தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேனி தொகுதியில் ''உங்களுடன் நான்'' செயலி அறிமுகம்...! ஓ.பி.எஸ்.மகனின் புது முயற்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    தேனியில் தென்னை வளர்ச்சி வாரியம்: ஓ.பி.எஸ் மகன் உறுதி!

    தேனி: பெரியகுளத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ''உங்களுடன் நான்'' என்ற செயலியை வெளியிட்டார்.

    மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் அதிமுக தோல்வியடைந்த நிலையில், தேனியில் மட்டும் வெற்றிபெற்றது. காரணம் அங்கு போட்டியிட்டது அதிமுக ஒருங்கிணைப்பாளர் மகன் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத். அவருக்காக அப்போது தேர்தல் பணியாற்ற தென் மாவட்டங்களை சேர்ந்த பல நிர்வாகிகள் சொந்த தொகுதிகளை விட்டுவிட்டு தேனியில் முகாமிட்டனர்.

    theni mp o.p.ravindranathkumar to introduce ungaludan naan app

    தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியூர் நபர் எனக் கூறி தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார் ஓ.பி.ரவீந்தரநாத். அப்போது அவரை சந்தித்த இளைஞர்கள் சிலர், நீங்க வெற்றிபெற்றால் மட்டும் என்ன செய்யப்போகிறீர்கள், உங்களையும் நாங்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலைதான் ஏற்படும் எனத் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ஓ.பி.ரவீந்தரநாத், 24 மணி நேரமும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும், மற்ற எம்.பி.க்களுக்கு முன்மாதிரியாக திகழ்வேன் எனவும் வாக்குறுதி அளித்திருந்தார்.

    சவுதியில் எண்ணெய் உற்பத்தி மையம் மீது தாக்குதல்.. கச்சா எண்ணெய் விலை 28 ஆண்டுகளுக்கு பிறகு கிடுகிடுசவுதியில் எண்ணெய் உற்பத்தி மையம் மீது தாக்குதல்.. கச்சா எண்ணெய் விலை 28 ஆண்டுகளுக்கு பிறகு கிடுகிடு

    இந்நிலையில், அதனை நிறைவேற்றும் வகையில் பெரியகுளத்தில் உள்ள தனது சொந்த கட்டிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்த ரவீந்தரநாத் குமார் எம்.பி., தொகுதி மக்கள் தன்னை வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் 'உங்களுடன் நான்'' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளார். மேலும், நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல், தனது அலுவலகத்தை ஹை டெக்காக மாற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜக்கையன், மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    English summary
    theni mp o.p.ravindranathkumar to introduce ''ungaludan naan'' app
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X