தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்டாசு வெடித்து.. கேக் வெட்டி.. உற்சாக வரவேற்பு.. இவர் எலெக்ஷன்லலாம் ஜெயிக்கல.. என்னானு பாருங்க!

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவருக்கு பட்டாசு வெடித்து கேக் வெட்டி உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Recommended Video

    பட்டாசு வெடித்து.. கேக் வெட்டி.. உற்சாக வரவேற்பு.. இவர் எலெக்ஷன்லலாம் ஜெயிக்கல.. என்னானு பாருங்க

    தற்போது உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் தேனி மாவட்டத்திலும் அதிக அளவில் காணப்படுகிறது. நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசும் தேனி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

    Theni people gives warm welcome for a patient who recovered from corona

    இந்நிலையில் தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி சார்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக அரசு சார்பில் தனிமைப்படுத்தப்பட்டார்.

    Theni people gives warm welcome for a patient who recovered from corona

    பின்னர் அவர் பூரண குணமடைந்து நேற்றைய தினம் வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவருக்கு அவரது உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். சாலையில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி, ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர்.

    கொரோனா வைரஸ் வுகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியானது: அமெரிக்கா திட்டவட்டம்!! கொரோனா வைரஸ் வுகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியானது: அமெரிக்கா திட்டவட்டம்!!

    இந்த நிகழ்ச்சியினை அப்பகுதியில் உள்ள ஒருவர் அவரது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். சிகிச்சை பெற்று திரும்பிய நபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட இந்த பதிவானது தேனி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் அதிக அளவில் தற்போது பரவி வருகிறது.

    கொரோனா வைரஸ் வுகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியானது: அமெரிக்கா திட்டவட்டம்!!

    English summary
    Relatives of Corona patient in Theni welcomes by bursting crackers, cutting cakes. A video goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X