தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட தேனி மாணவி.. உடனே ஆக்சன் எடுத்த அமைச்சர் செங்கோட்டையன்

Google Oneindia Tamil News

Recommended Video

    பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவி..உடனே நடவடிக்கை எடுத்த அமைச்சர்-வீடியோ

    தேனி: தேனி அருகே தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேற்றப்பட்ட குழந்தை "அனைவருக்கும் கல்வி" திட்டத்தின்கீழ் உடனடியாக அதேபள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில், அதே கிராமத்தைச் சார்ந்த ஆனந்தன் இலக்கியா ஆகியோரின் மகள் யுகிதா, ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.

    theni school student rejoins same school: minister sengottaiyan

    எல்கேஜி முதல் தற்போது ஏழாம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்து வரும் யுகிதா, குடும்ப சூழ்நிலையால் நடப்பாண்டு கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தார்.

    அப்பாடா.. சவுதி அரம்கோ சொன்ன நல்ல சேதி.. நம்ம பாக்கெட்டுக்கு பாதகம் இல்லைஅப்பாடா.. சவுதி அரம்கோ சொன்ன நல்ல சேதி.. நம்ம பாக்கெட்டுக்கு பாதகம் இல்லை

    இருபத்தைந்தாயிரம் பள்ளிக்கட்டணம் செலுத்த நிர்வாகம் கூறிய நிலையில், கடந்த வாரம் ஆறாயிரம் ரூபாயை யுகிதாவின் தாய் செலுத்தியுள்ளார் . மீதி ரூபாயையும் உடனே செலுத்த வேண்டும் எனக்கூறி, அண்மையில் காலாண்டுத்தேர்வை எழுதவிடாமல் மாணவி யுகிதாவை பள்ளியைவிட்டு நிர்வாகம் வெளியே அனுப்பியது.

    இதனால் மனமுடைந்து பள்ளியின் வெளியே புத்தகப்பையுடன் அழுதுகொண்டே நின்றிருந்தார். தகவல் அறிந்து யுகிதாவின் தாய் இலக்கியாவும் மகளைப்பார்த்து கதறி அழுதுள்ளார். இது தொடர்பாக செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கையில் இறங்கி மாணவியை மீண்டும் அதே பள்ளியில் சேர்த்துள்ளது..

    இது தொடர்பாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தனது டுவிட்டர் பக்கத்தில்,. "தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேற்றப்பட்ட குழந்தை "அனைவருக்கும் கல்வி" திட்டத்தின்கீழ் உடனடியாக அதேபள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது கல்வி கட்டணம் செலுத்தாத மாணாக்கர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

    English summary
    education minister sengottaiyan said theni school student rejoined same school after warn govt
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X