தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேனியில நின்னது ஒபிஎஸ் மகன் தானே.. வேட்பாளர்களின் பெயரே தெரியாத பாமர மக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    OPS Son in Theni : தேனியில் ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத் குமார் பிரச்சாரம்- வீடியோ

    தேனி: நடந்த முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போடுங்கம்மா ஓட்டு, எங்க சின்னத்தை பார்த்து என காலில் விழுந்து ஓட்டுக்கேட்டார்கள் அரசியல் கட்சி தலைவர்கள். நீங்களும் ஓட்டு போட்டு முடித்துவிட்டீர்கள். ஆனால் உங்களை சுற்றி இருக்கும் பாமர மக்களுக்கு யார் வேட்பாளர்கள் என்றே தெரியாது. எந்தெந்த கட்சி நின்றது என்பது கூட பலருக்கும் தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை.

    வாக்கள பெருமக்களே அருமை எங்கள் அருமை அண்ணன் என பெயரை சொல்லி, தொண்டை கிழிய அரசியல் கட்சியினர் ஓட்டு போடுமாறு வாக்குகேட்டனர். மக்களும் காசு வாங்கியோ, வாங்காமலோ, தங்கள் பொன்னான வாக்குகளை அளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டார்கள்.

    சரி தேர்தல் முடிந்துவிட்டதே, தேனியில் உள்ள எங்கள் பக்கத்து வீடு மற்றும் தெருவில் உள்ளவர்களிடம் அம்மா உங்ககிட்ட ஒரு கேள்வி என சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன். அவர்கள் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதனாலயே இந்த கட்டுரையை இப்போது எழுதுகிறேன்.

    தலைமை நீதிபதிக்கு எதிரான சதி.. அனில் அம்பானிக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்பு.. பகீர் புகார்! தலைமை நீதிபதிக்கு எதிரான சதி.. அனில் அம்பானிக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்பு.. பகீர் புகார்!

    பெயர் தெரியவில்லை

    பெயர் தெரியவில்லை

    நான் கேள்வி கேட்டவர்களில் சிலர் 60 வயதை கடந்த பாட்டிகள், 40 வயதை கடந்த அம்மாக்களும் இருந்தார்கள். அவர்களிடம் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் நின்ற வேட்பாளர் யார் என கேட்டேன். எல்லோருமே ஓபிஎஸ் மகன் என்றார்கள். ஆனால் அவரது பெயர் நான் கேள்வி கேட்ட 10 பேருக்குமே தெரியவில்லை. அதிமுக என்ற உடன் ஓபிஎஸ் மகன், இரட்டை இலை என்று தான் தெரிந்திருக்கிறது.

    திமுகவா என்று கேள்வி

    திமுகவா என்று கேள்வி

    சரி காங்கிரஸ் சார்பில் நின்றது யார் என்று கேட்டேன். ஆனால் அவர்களுக்கு பெயரை சொல்ல தெரியாமல், திமுகவா என்று எதிர்கேள்வி கேட்டார்கள். ஆமாம் திமுக கூட்டணி என்றேன். அவர்கள் கை சின்னத்தை தான கேட்குறீங்க என்றார்கள். ஆமாம் என்றேன். ஆனால் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்பது தெரியவில்லை.

    பரிசுப்பெட்டி சின்னம்

    பரிசுப்பெட்டி சின்னம்

    சரி உங்களுக்கு அமமுக தெரியுமா என்று கேட்டேன். அவர்கள் அதற்கு அப்படீன்னா என்று எதிர்கேள்வி கேட்டார்கள். எனக்கு ஷாக்காக இருந்தாலும், டிடிவி கட்சி பாட்டி என்றேன். டிடிவியா தெரியும் என்றார் அந்த பாட்டி. தங்க தமிழ்செல்வனை தெரியுமா? என கேட்டபோது சிலர் தெரியும் என்றார்கள். பரிசுப்பெட்டி தெரியுமா என்றால் சிலர் தெரியும் என்றார்கள்.

    உதய சூரியன்

    உதய சூரியன்

    மற்றபடி மற்ற கட்சி வேட்பாளர்கள் யாரையுமே அவர்களுக்கு சுத்தமாக தெரியவில்லை. பாமர மக்கள் பலருக்கு இரட்டை இலை, உதய சூரியன், இவை இரண்டு தான் ஆழமாக பதிந்து இருக்கிறது. அப்போது தான் புரிந்து கொண்டேன். சில இடங்களில் மக்களிடம் தனிநபர்கள் செல்வாக்கு பெற்றுள்ளார்கள். சில இடங்களில் மக்களிடம் சின்னங்கள் மட்டுமே சேர்ந்துள்ளது என்று.

    சோஷியல் மீடியா

    சோஷியல் மீடியா

    சரி விஷயத்து வருகிறேன். இதேபோல் தான் ஒவ்வொரு தொகுதியிலும் பாமர மக்களுக்கு யார் வேட்பாளர்கள், அவர்கள் சொல்லும் வாக்குறுதிகள் என்ன என்பது தெரிவதில்லை. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்கள் சொல்வது தான் உலகத்தின் காதுக்கு போய் சேர்வதாக நம்புகிறோம். ஆனால் அவை எதுவும் பாமரனின் காதுகளுக்கு போய் சேருவதில்லை. இதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் பலம். ஏனெனில் பாமர மக்கள் தான் தமிழகத்தில் ஆட்சியை நிர்ணயிக்கும் வாக்காளர்கள்.

    தண்ணீர் வருதா?

    தண்ணீர் வருதா?

    எளிய மக்களுக்கு அந்த மாதம் ரேசன் அரசி போடுறாங்களா, இன்றைக்கு தண்ணீர் வராம போச்சே, இன்னைக்கு காய்கறி இம்புட்டு ரேட்டுக்கு விற்குதே, பென்சன் வருமா? என்ற கவலை தான் இருக்கிறது. மற்றபடி அவர்களுக்கு யார் ஆண்டால் என்ன, எல்லாம் ஒன்று தான் என்ற ரீதியில் இருக்கிறார்கள். யாருக்கு ஓட்டுப்போட்டாலும் இப்படித்தான் இருக்கப்போகிறார்கள் என்று சொல்வதை கேட்க முடிந்தது.

    தனிநபர் செல்வாக்கு

    தனிநபர் செல்வாக்கு

    எனவே மாற்றத்தை கொண்டுவருவோம் என்று போராடும் யாருமே, அடிமட்ட மக்களின் மனதில் தனிநபர்களாகத்தான் போய் சேர்ந்து இருக்கிறார்கள். அவர்களின் கட்சிகளோ, சின்னங்களோ, வேட்பாளர்களோ போய் சேரவில்லை. எனவே எளிய மக்களிடம் தங்கள் கட்சியியையும், சின்னத்தையும், வேட்பாளரையும் நிறுத்துவது என்பது நிச்சயம் மாற்றத்தை கொண்டுவர நினைப்பர்களுக்கு நிச்சயம் சவால் தான்.

    English summary
    lok sabha elections 2019: village people don't know candidates name and parties name in tamilnadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X