தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டெபாசிட் இழக்க பாடுபடுவோம்… அமைச்சர் செல்லூர் ராஜூ கலகல

Google Oneindia Tamil News

தேனி: தேனியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டெபாசிட் இழக்க பாடுபடுவோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆண்டித்தேவரின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளை அடுத்து அவரது படத்திற்கு அதிமுக வேட்பாளர்கள் ரவீந்திரநாத், ராஜ்சத்யன் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜு, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் பூக்கள் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

We will Work For lose deposit to EVKS Elangovan Says Minister Sellur Raju

விஜயகாந்த் நல்லவர்... அவரை நான் விமர்சிக்க மாட்டேன்... உதயநிதி ஸ்டாலின் உருக்கம் விஜயகாந்த் நல்லவர்... அவரை நான் விமர்சிக்க மாட்டேன்... உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர் ஆண்டித்தேவர் என்றார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டெபாசிட் இழக்க பாடுபடுவோம்.

ஜெயலலிதாவை ஒருமையில் விமர்சித்து யாரும் வெற்றி பெற முடியாது என்றும் இரட்டை இலை வெற்றி அடைய போகிறது எனவும் கூறினார். தேனி மாவட்டம் அம்மா மாவட்டம் என தான் அழைக்கப்படுவதாகவும், ரவீந்திரநாத் மிகப்பெரிய வெற்றி பெறுவார் வேண்டும் தெரிவித்தார்.

என்ன செய்தார்கள்? என்ன பேசினார்கள்.. தமிழக எம்பிக்கள் 5 வருடத்தில் செயல்பட்டது எப்படி தெரியுமா?

இதனைத் தொடர்ந்து பேசிய தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் கூறுகையில்: "தேனி உட்பட 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார். 18 ஆண்டுகளாக அதிமுகவில் களப்பணி ஆற்றி உள்ளேன், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மிக சிறப்பாக ஆட்சி நடைபெறுவதாகவும் கூறினார்.

தேர்தல் காலத்திற்கு ஏற்ப கூட்டணி வைக்கப்பட்டு உள்ளது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர் தொகுதியில் போட்டியிடாமல் தேனியில் நிற்கிறார். முல்லை பெரியாறு பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஈ.வி.கே.எஸ் குரல் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

English summary
Minister Sellur Raju said that We will Work For lose deposit to EVKS Elangovan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X