தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடப்பாவமே.. இப்படியா தோற்றார் தங்கத் தமிழ்ச்செல்வன்.. ஓபிஎஸ் மகன் வெற்றியின் பின்னணி

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ்தான் அழியப் போகிறார்.. தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி -வீடியோ

    தேனி: தேனி தொகுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தோல்விக்கு பின்னணியில் ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

    அதிமுக எம்எல்ஏவாக இருந்த தங்கத் தமிழ்ச் செல்வன், ஆட்சிக்கு எதிராக தினகரனுடன் சேர்ந்து கலகத்தில் ஈடுபட்டதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டவராகும். இந்த லோக்சபா தேர்தலில் தேனி லோக்சபா தொகுதியில் அமமுக வேட்பாளராக அவர் களமிறக்கப்பட்டார்.

    அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்துக்கு பெரும் போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தங்கத் தமிழ்ச் செல்வன் பெரும் தோல்வியை சந்தித்துள்ளார்.

    ஆட்டம் ஆரம்பம்...பிரியங்கா கணவர் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்ய கோரி அமலாக்கத்துறை திடீர் மனு ஆட்டம் ஆரம்பம்...பிரியங்கா கணவர் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்ய கோரி அமலாக்கத்துறை திடீர் மனு

    சறுக்கிய தங்கத் தமிழ்ச்செல்வன்

    சறுக்கிய தங்கத் தமிழ்ச்செல்வன்

    ரவீந்திரநாத் 5,04,813 வாக்குகளை பெற்ற நிலையில், தங்கத் தமிழ்ச்செல்வன் 1,44,050 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். எங்கு இப்படி சறுக்கியது என்பது பற்றி தங்கத் தமிழ்ச் செல்வன் தரப்பு ஒரு சர்வே எடுத்துள்ளது. அதில், பல வாக்காளர்களும், அதாவது, தங்கத் தமிழ்ச் செல்வனுக்கு வாக்களிக்க விரும்பியவர்களும் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டதாக தெரிவித்தார்களாம்.

    இரட்டை இலை

    இரட்டை இலை

    கடந்த 20 வருட காலமாக தங்கத் தமிழ்ச் செல்வன் இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டு பிரச்சாரம் செய்தவர். எனவே, கிராமப்புற பாமர மக்கள், அவர் இரட்டை இலையில்தான் போட்டியிடுகிறார் என்றுதான் நினைத்தார்களாம். ஆக, தங்கத் தமிழ்ச் செல்வனுக்குதான் ஓட்டு போட்டோம் என சொல்லிக்கொண்டே இரட்டை இலையில் வாக்களித்துள்ளனர்.

    காமெடி காட்சி

    காமெடி காட்சி

    வடிவேலு நடித்த தமிழ் சினிமா ஒன்றில், யாருக்கு ஓட்டு போட்டீங்க என வடிவேலு கேட்கும்போது, உங்களுக்குத்தான் போட்டேன் என வாக்காளர்கள் பதில் அளிப்பார்கள். நன்கு விசாரித்தால், ஏணி சின்னத்திற்கு ஒரு குத்து, தென்னை மர சின்னத்திற்கு ஒரு குத்து என விரிவாக சொல்வார்கள். அப்படியாகியுள்ளது தங்கத் தமிழ்ச் செல்வன் நிலைமையும்.

    தொகுதிக்கு புதிது

    தொகுதிக்கு புதிது

    ரவீந்திரநாத் மற்றும், தங்கத் தமிழ்ச் செல்வன் நடுவேயான போட்டியில் பலன் பெற்றது காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான். வேறு மாவட்டத்தை சேர்ந்த அவர், தொகுதிக்கு புதிது என்றாலும், 4,28,120 லட்சம் ஓட்டுக்களை பெற்று அசத்தியுள்ளார்.

    English summary
    Why Thanga tamilselvan defeated very badly in Theni Loksabha constituency? here is the symbol issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X