• search
தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வயசுக்கு வந்த மகள்கள்.. அடங்காத முத்துமாரி.. கடைசியில் நடந்த அந்த ஷாக்.. பொறி வைத்து தூக்கிய போலீஸ்

|

தேனி: கட்டிய கணவனை பெட்ரோல் ஊற்றியே எரித்து கொன்றுவிட்டார் அந்த பாசக்கார இளம் மனைவி.. அப்படியே அவரை அள்ளி கொண்டு போய்

  கள்ளக்காதலை கண்டித்த கணவன்... எரித்துக் கொன்ற மனைவி... தேனியில் பரபரப்பு!

  தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. கடந்த ஜுன் 14ம் தேதி ஒரு ஆணின் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது.. இந்த தகவல் உத்தமபாளையம் போலீசாருக்கு கிடைத்ததும் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றினர்.

  போஸ்ட் மார்ட்டத்துக்கு உடலை அனுப்பிவிட்டு விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அப்போதுதான் எரித்து கொல்லப்பட்டது நாகராஜ் என்பது தெரியவந்தது.. கூடலூர் போயன்மார் தெருவை சேர்ந்தவராம்.. 42 வயசாகிறது.. செங்கல் காளவாசல்களில் வேலைபார்த்து வந்திருக்கிறார்.

  யார் அந்த 214 பேர்.. யார் அந்த 214 பேர்.. "அவருக்கு" எதிராக லெட்டர் அறிவாலயத்துக்கு பறந்ததாமே..!?

  க்ளூ

  க்ளூ

  ஆனால், இவரை யார் கொன்றார்கள், ஏன் கொன்றார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை.. உடல் எரிந்து கிடந்ததால் தடயமும், க்ளூவும் கிடைக்கவில்லை.. அதனால், இறந்தவரின் எலும்புகள் டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. கடந்த 9 மாதங்களுக்கு மேலாக இந்த வழக்கில் துப்பு துலங்காமல் இருந்த நிலையில், குடும்பத்தினரிடம் விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான் முத்துமாரி தானாக வந்து போலீசார் சந்தேக வலையில் விழுந்தார். முத்துசாமி - நாகராஜ் தம்பதிக்கு கல்யாணம் ஆகி 19 வருடம் ஆகிறதாம்.. வயதுக்கு வந்த 2 மகள்கள் இருக்கிறார்கள்.

   செல்வராஜ்

  செல்வராஜ்

  எனினும், முத்துமாரியின் புத்தி கள்ளக்காதல் வரை போயுள்ளது.. அந்த கள்ளக்காதலன் பெயர் செல்வராஜ்.. புதுப்பட்டியை சேர்ந்தவர்.. எப்படியோ இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, பிறகு ஒருவரை ஒருவர் பிரிந்து செல்ல முடியாத அளவுக்கு நெருக்கம் கூடியுள்ளது... பலமுறை இருவரும் ஜாலியாகவும் இருந்திருக்கிறார்கள்.. ஆனால், நாகராஜ் அடிக்கடி வேலை விஷயமாக கோயம்புத்தூர் சென்றுவிடுவாராம்.. மாசத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வந்து போவாராம்.

   தகராறு

  தகராறு

  வெளியூருக்கு சென்றுவிடவும், தண்ணி அடிக்கும் பழக்கமும் அவருக்கு சேர்ந்து கொண்டுள்ளது.. இது முத்துமாரிக்கு பிடிக்கவில்லை... அதனால் நாகராஜ் - முத்துமாரி இடையே அடிக்கடி தகராறும் வந்து போயுள்ளது.. மற்றொருபுறம் செல்வராஜுடன் நெருக்கம் கூடிக் கொண்டே போனது. இதனிடையே முத்துமாரியின் மகளுக்கு கல்யாண ஏற்பாடு நடந்துள்ளது.. செல்வராஜ் தான் நிறைய பணம் தந்து உதவியிருக்கிறார்..

   விறகு கட்டை

  விறகு கட்டை

  மகள் கல்யாணத்துக்கு நாகராஜ் சொந்த ஊருக்கு வரும்போதுதான், இந்த ஜோடியின் கள்ளத்தனம் அறிந்து ஆவேசமானார்.. முத்துமாரியை கண்டித்தார்.. முத்துமாரியோ இதை பற்றி செல்வராஜுவிடம் சொன்னார்.. இதற்கு பிறகு 2 பேரும் சேர்ந்து செல்வராஜை கொலை செய்ய முடிவு செய்தனர். சம்பத்தன்று நாகராஜ் போதையில் இருந்தபோது, அளவுக்கு அதிகமாக தண்ணி ஊற்றி தந்துள்ளார் முத்துமாரி.. ஒருகட்டத்தில் நிலைதடுமாறி நாகராஜ் கீழே விழவும், அவரது கழுத்தை துண்டினால் இறுக்கி இருக்கிறார் செல்வராஜ்..

   தலைமறைவு

  தலைமறைவு

  உடனே முத்துமாரி விறகு கட்டைகளை கொண்டு வந்து நாகராஜ் மண்டையை பிளந்துள்ளார்.. இதில் அப்போதே உயிர் பிரிந்துவிட்டது.. இறுதியில் இருவரும் சேர்ந்து சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்... இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, போலீசார் முத்துமாரியை கைது செய்தனர். ஆனால், செல்வராஜை காணோம்.. அவரை தேடி வருகிறாகள்.. கட்டின கணவனை மனைவி தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் தேனியையே அலற வைத்து வருகிறது.

   
   
   
  English summary
  Wife arrested for burning husband to death in Theni
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X