திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 அடி நீளம்.. அது பாட்டுக்கு ஜாலியா நகர்ந்து போனது.. அலறியடித்து ஓடிய கடையம் மக்கள்!

நெல்லை அருகே 5 பாம்புகள் ஒரே நாளில் பிடிபட்டன

Google Oneindia Tamil News

நெல்லை: "ஆமா.. அது என்ன 10 அடி நீளத்துக்கு ஜாலியா நகர்ந்து போய்ட்டு இருக்கு.." சொல்லியபடி அலறி அடித்து கொண்டு ஓடினர் அம்பாசமுத்திர மக்கள்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்கள் பீதியில் உள்ளனர்.

10 feet long snake caught near nellai

இங்குள்ள ஆழ்வார்குறிச்சியில் கிருஷ்ணன் என்பவரது வீட்டில் ரொம்ப நேரமாக சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அதனால் என்னவென்று தேட ஆரம்பித்தார் கிருஷ்ணன். அப்போதுதான், சுமார் 5 அடி நீளத்துக்கு கொம்பேரி மூக்கன் பாம்பு உட்கார்ந்து கொண்டிருந்தது.

10 feet long snake caught near nellai

இதன்பிறகு, அதே கடையத்தை சேர்ந்த முருகனின் வயலில் கண்ணாடி விரியன் பாம்பு நெளிந்து கொண்டிருந்தது. இது சுமார் 5 அடி நீளம் இருக்கும். செங்கானூரைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரது வீட்டில் 3 அடி நீளமுள்ள உழவன் பாம்பு அடங்கி கிடந்தது.

சமூக வலைதளத்தில் போலி அக்கவுண்ட்.. கமலேஷ் திவாரி கொலையாளிகளின் முதல் ஆயுதம்!சமூக வலைதளத்தில் போலி அக்கவுண்ட்.. கமலேஷ் திவாரி கொலையாளிகளின் முதல் ஆயுதம்!

அதேபோல, ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த ரவி வீட்டில் நீர்க் கோழிப் பாம்பு தென்பட்டது. இது சுமார் 3 அடி இருந்தது. இரவு நேரத்தில், கல்யாணிபுரம் - சம்பன்குளம் ரோட்டில் மக்கள் வந்து கொண்டிருந்தபோது, ஒரு மலைப்பாம்பு அவர்களை கிராஸ் செய்துவிட்டு ஜாலியாக சென்று கொண்டிருந்தது. அது 10அடி நீளமாம்.. இதை பார்த்து தலைதெறித்து ஓடியுள்ளனர் மக்கள்..

10 feet long snake caught near nellai

இதெல்லாம் கடையம் என்ற பகுதிக்குள்ளேயே தென்பட்ட பாம்புகள்.. அதனால் பொதுமக்கள் உடனடியாக கடையம் வனச்சரகத்துக்கு தகவல் அளிக்க, ஊழியர்கள் விரைந்து வந்தனர். ஆளுக்கு ஒரு பக்கமாக நுழைந்து வன அலுவலர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

10 feet long snake caught near nellai

பின்னர் ஒரே நாளில், மொத்தம் 5 பாம்புகளையும் பிடித்து விட்டனர்.. அவைகளை சிவசைலம் பீட் வாழையாறு வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். "இப்போ மழைக்காலம் என்பதால், இப்படி பாம்புகள் நிறைய நடமாடும்.. அதனால் யாரும் பயப்பட தேவையில்லை... உடனடியாக பாம்புகளை பார்த்தால் 04634-25059... 04634-283165 இந்த நம்பருக்கு சொல்லுங்கள்.. யாரும் பாம்புகளை அடிச்சி கொன்னுடாதீங்க... அது சட்டப்படி குற்றம்" என்று தைரியப்படுத்திவிட்டு போனார்கள் வன ஊழியர்கள்.

English summary
5 snakes including 10 feet long snake caught in kadayam area near thirunelveli in one day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X