திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164; மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 132 பேருக்கு கொரோனா

Google Oneindia Tamil News

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்கள் 164 பேருக்கும் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 132 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகவேகமாக இருந்து வருகிறது. இந்திய அளவில் கொரோனா பரவலில் தமிழகம் 4-வது இடத்தில் இருந்து வருகிறது.

ரயில் என்ஜின் டிரைவர்களை துரத்தும் கொரோனா.. 90 பேருக்கு பாதிப்பு.. 56 ரயில்கள் ரத்து.. எங்க தெரியுமாரயில் என்ஜின் டிரைவர்களை துரத்தும் கொரோனா.. 90 பேருக்கு பாதிப்பு.. 56 ரயில்கள் ரத்து.. எங்க தெரியுமா

தமிழகத்தில் இரவு ஊரடங்கு

தமிழகத்தில் இரவு ஊரடங்கு

இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் படுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

164 பேருக்கு கொரோனா

164 பேருக்கு கொரோனா

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள், ஊழியர்கள் , அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பரிசோதனைகளில் இதுவரை மொத்தம் 164 கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா உறுதியானது.

132 பேருக்கு பாதிப்பு

132 பேருக்கு பாதிப்பு

அதேபோல் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெர்ளி ஆராய்ச்சி மைய ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 132 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கூடங்குளம் அரசு மருத்துவமனை, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனை ஆகியவற்றில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிர கண்காணிப்பு

தீவிர கண்காணிப்பு

மேலும் கொரொனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

English summary
According to the reports 164 test Coronaviurs positive at Kudankulam Nuclear Power Plant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X