திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புஷ்கரத்தில் நீராடியதால் பதவி போச்சே.. பெரும் சோகத்தில் 18 பேர்

Google Oneindia Tamil News

நெல்லை: தாமிரபரணி புஷ்கரத்தில் நீராடியதால் பதவி போய்விட்டதாக 18 பேரும் பெரும் சோகத்தில் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியானால் அது தங்களுக்கு சாதகமாகும் என்று தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். இதனால் தங்களை ஆளும் கட்சியினர் கடத்தி கொண்டு செல்வர் என்பதால் 18 பேரும் குற்றாலத்துக்கு படையெடுத்தனர்.

இதனிடையே நேற்று முன் தினம் தாமிரபரணி புஷ்கரத்தில் சென்று நீராடினர். அதற்கு முன்னதாக தங்கதமிழ்ச்செல்வன் பேசுகையில் புஷ்கரணியில் நீராடல் மூலம் இன்றுடன் எல்லாம் முடிந்து நல்ல காலம் பிறக்க வேண்டும் என நம்புகிறோம் என்று தெரிவித்திருந்தார்.

18 பேரும்

18 பேரும்

இந்த நிலையில் இன்று தகுதி நீக்கம் குறித்து தீர்ப்பு வெளியானது. அதில் தகுதி நீக்கம் என்ற சபாநாயகரின் முடிவு சரியானதே என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இதனால் 18 பேரும் ஆடி போய்விட்டனர்.

தேற்றினர்

தேற்றினர்

இந்த தீர்ப்பை கேட்டவுடன் 18 பேரில் சிலர் கண் கலங்கியதாகவும் உடன் இருந்தவர்கள் அவர்களை தேற்றியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இடைத்தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் கூறி அவர்களை தேற்றியுள்ளனர்.

18 பேரும் சோகம்

18 பேரும் சோகம்

இன்னும் சிலரோ புஷ்கரத்தில் நீராடினால் நமக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றிருந்தோம். ஆனால் தலை முழுக்கியது எம்எல்ஏ பதவிக்கும் சேர்த்துதான் என்பது தெரியாமல் போய்விட்டதே என 18 பேரும் புலம்புகின்றனராம்.

மக்களை எப்படி சந்திப்பது

மக்களை எப்படி சந்திப்பது

இடைத்தேர்தலில் சந்திக்கலாம் என்றாலும் அவ்வப்போது ரிசார்ட் ரிசார்ட்டாக நாம் சென்றதால் மக்கள் அதிருப்தியில் இருப்பார்களே. அவர்களை நாம் எப்படி சந்திப்பது என்றும் சிலர் கேட்கின்றனர். எதுவாக இருந்தாலும் தினகரன் குற்றாலத்துக்கு வந்த பிறகுதான் இவர்களின் புலம்பல்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

English summary
18 Disqualified MLAs saddened on hearing the judgement and they accuses all because of Pushkarni holy dip.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X