திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குற்றாலத்தில் இருந்து சோகத்துடன் மதுரை திரும்பிய 18 பேர்..பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

குற்றாலம்: தகுதி நீக்க வழக்கு தீர்ப்புக்காக குற்றாலத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் பாதகமான தீர்ப்பை அடுத்து குற்றாலம் ரிசார்ட்டை பேக் அப் செய்து மதுரை செல்கின்றனர்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எப்போதும் வேண்டுமானாலும் தீர்ப்பு வெளியாகும் என்பதால் பாதுகாப்பு கருதி தினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

18 disqualified MLAs start their journey to Madurai

இரு நாட்களும் வாக்கிங் செல்வது, லெமன் டீ குடிப்பது, புஷ்கரணியில் குளியல் என ஜாலியாக பொழுதை கழித்தனர். இந்த சந்தோஷத்தில் திடீரென இடியாக வந்து பாய்ந்தது தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு.

அதாவது தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியே என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இதை கேட்டு 18 பேரும் ஆடி போய்விட்டனர். சிலர் கண்கள் கலங்கின.

[புது குழப்பம்.. தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் இடைத் தேர்தலில் போட்டியிட முடியாதா?]

இந்நிலையில் அடுத்த கட்ட முடிவுக்காக தினகரன் குற்றாலத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள ரிசார்ட்டை காலி செய்துவிட்டு 18 பேரும் மதுரை புறப்பட்டனர். குற்றாலத்துக்கு வரும் போது ஜாலியாக இருந்த இவர்கள் தற்போது சோகத்துடன் மதுரை திரும்புகின்றனர்.

இதற்கான காரணம் தெரியவில்லை. மதுரை வந்து விமானம் மூலம் அவரவர் வீடுகளுக்கு செல்கின்றனரா இல்லை அங்கு தினகரனை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனரா என தெரியவில்லை. நாளைக்குள் தீர்ப்பை மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
18 disqualified MLAs start their journey to Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X