திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாரிமுத்தாள் கேட்டு இல்லைன்னு சொல்வதா.. நோ... நகை கடையே லவட்டிக் கொண்டு போன கணேசன்!

கள்ளக்காதலிக்காக நகைக்கடையையே காதலன் கொள்ளையடித்துள்ளார்.

Google Oneindia Tamil News

நெல்லை... ஆஆஹாஹா... கள்ளக்காதலிக்காக இப்போ நகைக்கடையே ஆட்டைய போட ஆரம்பிச்சாட்டாங்களேப்பா!!!!
நெல்லையை சேர்ந்தவர் கணேசன். இவர்தான் காதலன். மாரிமுத்தாள் என்பவர் இவரது கள்ளக்காதலி!! மாரிமுத்தாள் ஒரு நகை பைத்தியம் போல!! எப்ப பார்த்தாலும் கணேசனிடம் நகை வேண்டும், நகை வேண்டும் என்று கேட்டு கொண்டே இருந்துள்ளார்.

ஆனால் கணேசனிடம் பணம் இல்லை.. பைசா சுத்தமா இல்லாதபோது காதலி கேட்கும் நகையை மட்டும் எப்படி வாங்க முடியும்? ஆனாலும் மாரிமுத்தாளின் ஆசையை எப்படியும் நிறைவேற்றி அவரது முகத்தில் சந்தோஷத்தை பார்க்க ஆசைப்பட்டார். எப்படியும் நகை வாங்கும் அளவுக்கு நாம சம்பாதிக்க போறதில்லை என்ற முடிவுக்கு வந்த கணேசன், அதற்காக ஒரு ஐடியாவையும் போட்டார்.

[சீட் பிடிக்க எதை தூக்கி போடுறாங்க பாருங்க.. குன்னூரில் ஒரு குபீர் சம்பவம்!]

 மதுரா நகைக்கடை

மதுரா நகைக்கடை

அதன்படி கடந்த 25 ந்தேதி நள்ளிரவு நெல்லை பஸ் ஸ்டேண்ட் எதிரே இருக்கும் மதுரா நகைக்கடையின் பூட்டை உடைத்தார். உள்ளே புகுந்து கடைக்குள் இருந்த நகைகள், பணம் அனைத்தையும் ஆட்டைய போட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். மறுநாள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, எல்லாமே கொள்ளையடிக்கப்பட்டதை கண்ட கடைக்காரர் போலீசில் புகார் செய்தார். விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்தார்கள்.

 சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

இந்த கொள்ளையை கண்டுபிடிக்கவே 2 தனிப்படையும் அமைக்கப்பட்டது. மேலும் சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தார்கள். அதில், ஒருவர் பைக்கில் வந்து கடை முன் நிற்பதை பார்த்தார்கள். உடனடியாக அந்த பைக்கின் நம்பரை வைத்து சம்பந்தப்பட்ட கணேசனை பிடித்துவிட்டார்கள். கடையையே இப்படித்தான் கொள்ளையடிப்பதா என போலீசார் கணேசனிடம் விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

 சின்ன சின்ன திருட்டு

சின்ன சின்ன திருட்டு

அப்போது கணேசன் கூறும்போது, "எப்பவுமே வீடுகளில் நுழைந்து சின்ன சின்ன திருட்டுதான் செய்துக்கிட்டு இருந்தேன். இப்போ செஞ்சதுதான் பெரிய திருட்டு. என் கள்ளக்காதலியை குஷிப்படுத்த எனக்கு வேற வழி தெரியல. எப்பவுமே நகை வேணும்னு கேட்டுக்கிட்டே இருந்தாள். அதனால்தான் கடையை உடைத்து நிறைய நகைகள், 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் எல்லாத்தையும் அள்ளி ஒரு பையில் போட்டுக் கொண்டு போனேன். யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாதுன்னு ஹெல்மெட் போட்டுக்கிட்டேன்.

 அழகு பார்த்தேன்

அழகு பார்த்தேன்

கொள்ளையடித்த நகைகளை என் காதலியிடம் கொண்டு போய் கொடுத்தேன். எல்லா நகைகளையும் பார்த்து அசந்துட்டாள். அந்த நகைகளை அவளுக்கு போட்டு அழகு பார்த்தேன். ஆனால் அவள் அந்த நகைகளில் கொஞ்சம் எடுத்து ஒரு பேங்கில் வைத்து, பணமாக வாங்கி விட்டாள். மீதமிருக்கும் நகைகளை அப்பப்போ ஆசைக்காக போட்டு கொள்வாள்." இவ்வாறு கணேசன் தெரிவித்தார்.

ரூ. 25 லட்சம்

இதையடுத்து மாரிமுத்தாளையும் போலீசார் கைது செய்தனர். மாரிமுத்தாள் அடகு வைத்த திருட்டு நகைகள், வீட்டில் உள்ள நகைகள், மற்றும் அடமானம் வைத்து வாங்கப்பட்ட பணம், கணேசன் கொள்ளையடித்து கொடுத்த பணம் என எல்லாவற்றையும் போலீசார் மீட்டனர். கணேசன் நகைக்கடையில் அபேஸ் பண்ண நகைகள் மட்டும் 25 லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இப்படி நகைக்கடையையே ஆட்டைய போட்ட லவ் ஜோடி தற்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறது.

English summary
Illegal Lovers arrested for stole Jewelry in Nellai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X