திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்னு கேக்காதீங்க?.. ஆறு ஒரு ரூபாய் சேந்தா ஹெட்செட்டே கிடைக்கும்!

Google Oneindia Tamil News

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட மொபைல் கடை ஒன்று ரூ 6-க்கு ஹெட்செட், டெம்பர் கிளாஸ் கிடைக்கும் என்ற அறிவிப்பால் அங்கு கூட்டம் அலைமோதியது. பிறவு என்ன? திறப்பு விழா கண்ட கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் மூடுவிழாவை நடத்தினர்.

தமிழகத்தில் கொரோனாவால் தினந்தோறும் 5000 முதல் 6000 பேர் வரை பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதுவரை கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 3.90 லட்சத்தை தாண்டியது. எனினும் பாதிப்பு எண்ணிக்கைக்கு சரிசமமாக கொரோனாவிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கை உள்ளது சற்று ஆறுதலை தருகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் போடப்பட்ட லாக்டவுனால் மூடப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் தற்போது மெல்ல மெல்ல திறக்கப்பட்டு வருகின்றன. அதிலும் முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளி விடுதல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கக் கூறுகிறார்கள்.

10,000 லிட்டர் கோகோ கோலா.. மொத்தமா குவிச்சு வச்சு.. வெடிக்க விட்டு.. ரஷ்யர் செய்த வெட்டி வேலை!10,000 லிட்டர் கோகோ கோலா.. மொத்தமா குவிச்சு வச்சு.. வெடிக்க விட்டு.. ரஷ்யர் செய்த வெட்டி வேலை!

வியாபாரம்

வியாபாரம்

இந்த நிலையில் திறந்த கடைகளில் வியாபாரத்தை பெருக்கவும் விட்டதை பிடிக்கவும் பல்வேறு யுத்திகள் கையாளப்படுகின்றன. அந்த வகையில் நெல்லை மாவட்டம் கொக்கிரகுளத்தில் ஒரு மொபைல் கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு அதிரடி ஆஃபராக அதும் ஆவணி மாத ஆஃபராக ரூ 6-க்கு ஹெட்செட், டெம்பர் கிளாஸ் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.

ஹெட்செட்

ஹெட்செட்

இந்த ஆஃபர் குறைந்த நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கொரோனா அச்சம் கொஞ்சம் கூட இல்லாமல் குறைந்த விலையில் ஹெட்செட் கிடைப்பதால் அதை வாங்க அதிகளவில் கூட்டம் குவிந்தது. ஒரு கட்டத்தில் வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் கூடியது.

முண்டியடித்த கூட்டம்

முண்டியடித்த கூட்டம்

இந்த நிலையில் இந்த கடையில் கூட்டம் குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு பெரும்பாலானோர் மாஸ்க் அணியாமல் ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி நின்றுக் கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீஸாருக்கும் மாநகராட்சியினருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.

ஆஃபர்

ஆஃபர்

பின்னர் பொதுமக்களை விரட்டியடித்த போலீஸார் கொரோனா காலத்தில் ஆஃபர்களை போட்டு இது போல் கூட்டத்தை சேர்த்ததாக அந்த கடைக்கு சீல் வைத்தனர். புதிதாக திறப்பு விழா நடத்தப்பட்ட கடைக்கு ஆஃபர் என்ற பெயரில் கடைக்காரர்களே மூடுவிழா நடத்திவிட்டனர். இன்னும் சிலரோ இந்த கடை பழைய கடைதான், ஆனால் ஆஃபர் மட்டும் புதிது என்கிறார்கள்.

English summary
A Cellphone shop in Nellai gives offer price for headset and Temper glass for Rs 6. Police puts seal for the shop because of heavy crowd.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X