திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போர்வெல்லால் விண்ணை முட்டி பீய்ச்சி அடித்த தண்ணீர்.. நம்ப முடியாத அளவுக்கு வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டம் சிறுக்கன்குறிச்சி கிராமத்தில் ஒரு வீட்டில் போர் போட்டவுடன் அதிக அளவிலான தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில் தண்ணீரை தேடி மக்கள் குடங்களுடன் பல கி.மீ. தூரம் சுற்றி அலைகின்றனர். ஆயினும் சொற்ப அளவிலேயே தண்ணீர் கிடைக்கிறது.

சென்னையில் தண்ணீர் லாரியை நம்பி மக்கள் இரவு பகல் பாராமல் குடங்களை லைனில் போட்டுவிட்டு காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தது. ஆயினும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் அளவுக்கு உயரவில்லை.

நீர் நிலைகள்

நீர் நிலைகள்

இந்த நிலையில் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீர் நிலைகளும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.

ஆச்சரியம்

பொதுவாக வெயில் காலத்தில்தான் போர் போடுவது வழக்கம். அதுபோல் நெல்லை மாவட்டம் சிறுக்கன்குறிச்சி கிராமத்தில் ஒரு வீட்டில் போர் போட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பணியை கண்டவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

தண்ணீர் பிரச்சினை

தண்ணீர் பிரச்சினை

சிறிது தூரம் தோண்டியவுடன் தண்ணீர் பீய்ச்சி கொண்டு அடித்தது. ஏதோ கடல் அலைகள் பாறையில் மோதியதும் உயரும் அளவுக்கான தண்ணீர் பீய்ச்சி அடித்தது. எல்லா இடங்களிலும் தண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது.

தேவை பூர்த்தி

வறட்சியால் நிலத்தடி நீரும் அதளபாதாளத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. இந்த நிலையில் இது போல் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் அளவுக்கான வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து தெரியவில்லை. இந்த அளவுக்கு தண்ணீர் வருமா என ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த வீடியோ உலா வருகிறது. ஒரு வேளை இந்த வீடியோ உண்மை என்றால் நிச்சயம் அப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

English summary
A video which goes viral that heavy water came out from bore well near Nellai. People are happy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X