திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாடித் திரியட்டும் பறவைகள்.. தொல்லை தராத கிராமம்.. பட்டாசு வாடையே அறியாமல் 24 வருடம்

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் கிராம மக்கள் பறவைகளுக்காக 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே பட்டாசுதான் அனைவரின் நினைவுக்கு வரும். அப்படியிருக்கையில் நெல்லையில் ஒரு கிராமத்தில் பறவைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிப்பதையே தவிர்த்து வருகின்றனர் என்றால் ஆச்சரியமாக உள்ளது.

தமிழக அரசு

தமிழக அரசு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது கூந்தன்குளம். இங்கு ஒரு குளம் உள்ளது. அதில் ஏராளமான பறவைகள் வந்து தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரிகின்றன. மக்களால் உருவாக்கப்பட்ட சரணாலயம் என்று 1994-ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

எந்த நாட்டு பறவைகள்

எந்த நாட்டு பறவைகள்

இந்த குளத்துக்கு சைபீரியா, நைஜீரியா, சுவிட்சர்லாந்து, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து பலவகையான பறவைகள் வந்து செல்கினறன. இந்த குளத்தில் ஊசிவால் வாத்து, பட்டைதலை வாத்து, தட்டை வாயன், முக்குளிப்பான், செங்கால் நாரை, மஞ்சள் நாரை, கொக்குகள், கரன்டி வாயன் உள்ளிட்ட 43 வகை பறவைகள் ஆண்டுதோறும் வருகின்றன.

இடையூறு

இடையூறு

பறவைகள் ஆண்டுதோறும் தீபாவளி சீசனை ஒட்டியே வருகின்றன. இதனால் பட்டாசு வெடித்தால் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவைகளுக்கு இடையூறு ஏற்படும்.

மகிழ்ச்சி

எனவே கூந்தன்குளம் கிராமத்தில் கடந்த 24 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தீபாவளி, கோயில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கூட பட்டாசு வெடிப்பதில்லை என்பது கிராம மக்கள் கூறுகின்றனர். வாயில்லா ஜீவன்களுக்காக தீபாவளி பண்டிகையின் அடையாளமான பட்டாசுகளை கிராமத்தினர் வெடிக்காதது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

English summary
A Village near Nellai not burns crackers for the past 24 years for Deepavali celebration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X