திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் தாங்க பபிதா.. எம்ஜிஆரோட நிழல்தான் எங்க அப்பா ஜஸ்டின்.. சீட் கொடுங்க.. தருமா அதிமுக

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் | Nanguneri By Election

    சென்னை: "நான் நாடார் சமுதாயம்ங்க.. எனக்கு சீட் கிடைக்கும்னு நம்புறேன்.. நிச்சயம் ஜெயிப்பேன்" முகம் நிறைய பூரிப்பு, புன்னகையுடன் கூறுகிறார் முன்னாள் கவர்ச்சி நடிகை பபிதா.

    நடிகை பபிதாவை அந்தக் காலத்து சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. கவர்ச்சி வேடங்களில் புகுந்து விளையாடியவர். இவரது குடும்பமே நட்சத்திர குடும்பம்தான். அப்பா ஜஸ்டினைப் பற்றி நம்முடைய அப்பா காலத்து ஆட்களுக்கு மறக்க முடியாது.

    சண்டை நடிகரான ஜஸ்டின்தான் மறைந்த எம்ஜிஆரின் மெய்க்காவலர். படங்களில் இணைந்தும் நடித்துள்ளார். எம்ஜிஆரின் நிழல் போல வலம் வந்தவர் ஜஸ்டின். அவரது செல்ல மகள்தான் பபிதா.

     2 தொகுதிகளிலும் வெற்றிக் கனி.. உதயநிதி ஸ்டாலினை களத்தில் இறக்கி.. திமுக போடுமா அதிரடி பிளான் 2 தொகுதிகளிலும் வெற்றிக் கனி.. உதயநிதி ஸ்டாலினை களத்தில் இறக்கி.. திமுக போடுமா அதிரடி பிளான்

    கரூர்

    கரூர்

    நீண்ட காலமாக அதிமுகவில் இருந்து வருகிறார் பபிதா. நட்சத்திர மேடைப் பேச்சாளராக வலம் வருகிறார். ஆனால் சமீப காலமாக இவரை சரியாக கட்சித் தலைமை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. நடந்து முடிந்த எம்பி தேர்தலின்போது, கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் மு. தம்பிதுரைக்காக இவர் வாக்கு சேகரித்தார்.

    ஆட்சி

    ஆட்சி

    அப்போது பிரச்சாரத்தில், "இத்தனை முறை ஆட்சியில் திமுக இருந்தும் ஏதாவது திட்டத்தை முறையாக செயல்படுத்தினாங்களா? திமுக ஆட்சிக்கு வந்தால் அவங்க குடும்பம் மட்டும் முன்னேறும். இதுவே அதிமுக ஆட்சி நீடித்தால் ஏழை எளியவர்கள் எல்லாரும் நன்றாக இருப்பார்கள்" என்று ரொம்ப நேரமாக பேசிக் கொண்டே இருந்தார்.

    சின்ன வீடு

    சின்ன வீடு

    ஆனால் சுற்றி நின்றிருந்த பொதுமக்களுக்கு இந்த பெண் யார் என்பதுபோலதான் வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டிருந்தனர். இதை கவனித்த பபிதா, "நான் யார்னு தெரியுதாங்க.. பாக்யராஜ் படத்தில் சின்னவீடாக நடித்திருக்கிறேன். அங்க பாருங்க.. சின்ன வீடுன்னு சொன்ன உடனேயே ஒருத்தர் எப்படி சிரிக்கிறார்? ஐயோ.. நிஜ சின்ன வீடு இல்லீங்க.. படத்தில அப்படி நடிச்சிருப்பேன்" என்று சொன்னார். மக்களின் மனதில் இப்படி நின்றுள்ள பபிதாதான் இப்போது சீட் கேட்டுள்ளார்.

    கையெழுத்து

    கையெழுத்து

    நாங்குநேரி இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் சீட் கேட்டுள்ளார் பபிதா. இதற்காக அதிமுக தலைமைக் கழகத்திற்கு இன்று வந்த அவர் முறைப்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்துள்ளார். தமிழில், அழகிய கையெழுத்துடன் அவர் விண்ணப்பத்தை நிரப்பியிருந்தார்.

    எம்ஜிஆர்

    எம்ஜிஆர்

    தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் கூறுகையில், நான் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். 30 வருடமாக கட்சியில் இருக்கிறேன். எனது தந்தை ஜஸ்டின் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பாதுகாவலராக இருந்தவர். இணைந்து நடித்தவர்.

    புன்னகை

    புன்னகை

    நட்சத்திரப் பேச்சாளராக இருந்து வருகிறேன். பல போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். எனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயம் ஜெயிப்பேன் என்றும் நம்புகிறேன் என்றும் கூறினார். அவரது முகத்தில் அத்தனை பூரிப்பு, புன்னகை.. பழையவர்களுக்கு சீட் கொடுத்து அழகு பார்ப்பது ஜெயலலிதா வழக்கம். பபிதாவுக்கும் சீட் கிடைக்குமா என்று பார்ப்போம்.

    English summary
    AIADMK Star Speaker Actress Babitha wants to contest in Nanguneri constitution by election on behalf of
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X