திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...! மேடையில் குட்டைப்பாவாடை ஆட்டம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Admk executives organize record dance in kalakadu Election campaign

    நெல்லை: நாங்குநேரி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் கூட்டத்தை கூட்டுவதற்காக ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் என்றாலே, அந்தக்கட்சியின் கொள்கைசார்ந்த பாடல்கள் தான் ஒலிக்கும். உதாரணத்துக்கு திமுக நிகழ்ச்சி என்றால் நாகூர் ஹனீபாவின் ஓடி வருகிறான் உதயசூரியன் என்ற வெண்கல குரல் ஒலிக்காமல் இருக்காது.

    அதேபோல், அதிமுக நிகழ்ச்சி என்றால், நீங்க நல்லா இருகோனும் நாடு முன்னேற என்ற எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ்பாடும் பாடல்கள் ஒலிக்கவிடப்படும்.

    விடிய விடிய கனமழை.. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்புவிடிய விடிய கனமழை.. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

    கலைநிகழ்ச்சி

    கலைநிகழ்ச்சி

    கால ஓட்டத்தில் அரசியல் கட்சிகளும் மாறத்தொடங்கி விட்டன. வெறும் கொள்கைப்பாடல்களை மட்டும் ஒலிக்கவிட்டால் யார் கேட்பார்கள், கூட்டத்திற்கு யார் வருவார்கள் என்பதை நன்கறிந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளுக்கு அரசியல் கட்சிகள் மாறிவிட்டன.

    பலே ஐடியா

    பலே ஐடியா

    நாங்குநேரியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து கடந்த 2 நாட்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அவர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் கூட்டத்தை அதிகளவு கூட்ட வேண்டும் என்ற நோக்கில் பல இடங்களில் குத்தாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர் அதிமுக நிர்வாகிகள்.

    தொடைதெரிய

    தொடைதெரிய

    இந்நிலையில், களக்காடு பகுதியில் முதல்வர் நேற்று வாக்குகேட்டு பிரச்சாரம் செய்ய சென்றார். அப்போது முதல்வர் வரும் வரை கூட்டத்தை கலையாமல் கட்டிப்போட வேண்டும் என்பதற்காக குட்டைப்பாவாடை ஆட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 10-க்கும் மேற்பட்ட பெண்கள் தொடைதெரிய குத்தாட்டம் போட்டது அங்கிருந்த பெண்களை முகம் சுளிக்கச் செய்தது.

    சீரழிவு

    சீரழிவு

    பொதுவிடங்களில் ஆபாசநடனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி இது போன்ற நடன நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் எப்படி அனுமதி கொடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இந்நிலையில், மக்கள் கூடும் இடத்தில் அதிமுகவினர் ஏற்பாடு செய்த குத்தாட்டம் நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிக்காதா என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.

    English summary
    admk executives organize record dance in kalakadu, meanwhile cm campaign
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X