திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தார்ப்பாய் போட்டு அண்ணா சிலையை மூடிய அதிகாரிகள்..!

Google Oneindia Tamil News

Recommended Video

    தார்ப்பாய் போட்டு அண்ணா சிலையை மூடிய அதிகாரிகள்..

    நெல்லை: நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அண்ணா சிலையை தார்ப்பாய் போட்டு அதிகாரிகள் மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் என்ன நினைத்தார்களோ திரும்பி வந்து தார்ப்பாயை அகற்றி விட்டனர்.

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளதை கடந்த பத்தாம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் இருந்து தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் அனைத்துப் பகுதியும் கொண்டுவரப்பட்டு அனைத்து அரசு அலுவலர்களும் தேர்தல் ஆணையத்தின் அலுவலர்களாக அங்கே மாறி விட்டனர்.

    Anna statue covered with gunny bags

    இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனை உள்ளிட்ட பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தி வருகின்றனர். மேலும் சாலையின் ஓரத்திலோ, தனியார் கட்டிடத்திலோ வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அரசியல் கட்சிகள் உடைய டிஜிட்டல் போர்டுகள் உள்ளிட்டவைகளை அழித்து வருகின்றனர்.

    கோவை எஸ்பி மீது நடவடிக்கை.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. ஹைகோர்ட் தடாலடி உத்தரவு கோவை எஸ்பி மீது நடவடிக்கை.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. ஹைகோர்ட் தடாலடி உத்தரவு

    வாகன தணிக்கை செய்து அளவுக்கு அதிகமாக கொண்டு செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலை உள்ளது. இந்த சிலை சுமார் 60 ஆண்டு பழமை வாய்ந்தது. பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சிலையை சாக்கு பை கொண்டு மூடி அதன் அருகில் இருந்த கொடி கம்பங்களையும் எந்த கட்சியினுடைய சார்ந்தது என்று தெரியாமல் மூடி வைத்தனர்.

    ஆனால் இதே போன்று செங்கோட்டை பகுதியில் பேரறிஞர் அண்ணாவினுடைய சிலை உள்ளது. அந்த சிலையை இதுவரை எந்த தேர்தல் அதிகாரிகளும், தேர்தல் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை எனவும், குற்றாலத்தில் உள்ள சிலை மட்டும்தான் அதிகாரிகளுக்கு தெரியுதோ என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இது பாரபட்சமாக இருக்கிறதே என்றும் முனகல்கள் எழுந்தன.

    இந்த நிலையில் தற்போது சிலையை மூடிய தார்ப்பாய் சாக்கை அகற்றி விட்டனர் அதிகாரிகள்.

    English summary
    Officials covereed Anna statue with Gunny bags in Courtallam and removed it later.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X