திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் சொன்ன நல்ல செய்தி.. கைப்பற்றப்பட்ட பைக்குகள் குறித்து!

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்களை சில நிபந்தனைகளுடன் சில சான்றுகளை பெற்றுக் கொண்டு திருப்பி தர உள்ளோம் என்று டுவிட்டரில் திருநெல்வேலி காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. இந்த உத்தரவு கடந்த 14ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 Arjun Saravanan, Deputy Commissioner of Police says good news for seized vehicles

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி அநாவசியமாக வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் போலீசார் எச்சரித்திருந்தனர். எச்சரிக்கையை மீறி வந்த வாகனங்களை தமிழகம் முழுவதும் போலீசார் பறிமுதல் செய்து அதை பாதுகாத்து வருகிறார்கள். அந்த வாகனங்களை பொதுவாக நீதிமன்றத்தில் சென்று அபராதம் கட்டித்தான் மீட்கமுடியும். போக்குவரத்து விதிகளை மீறினால் இதுதான் நடைமுறையும் கூட.

அப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் விதிகளை மீறி வந்ததாக ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அஸார் ஜேபி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணனை டேக் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் "கடந்த 7/4/2020 அன்று காலை 8 மணி அளவில் மேலப்பாளையம் சந்தையில் வைத்து காய்கறி வாங்க சென்ற போது எனது இருசக்கர வாகனம் மேலப்பாளையம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 15-ம் தேதி நீதிமன்றத்தில் சென்று அபராதத்தை கட்டிகொண்டு வாகனத்தை எடுக்கும் படி கூறினார்கள்

தற்போது நீதிமன்றம் இயங்காது என்று அறிவிப்பு வந்துள்ளது நான் எப்படி என்னோட வாகனத்தை வாங்குவது என்று சொல்லுங்க சார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இவருக்கு பதில் அளித்துள்ள திருநெல்வேலி காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன், "உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்களை சில நிபந்தனைகளுடன் சில சான்றுகளை பெற்றுக் கொண்டு திருப்பி தர உள்ளோம். விரிவான தகவல் விரைவில்" என்று கூறியுள்ளார்.

English summary
seized vehicles will give by some docments., says Arjun Saravanan, thirunelveli Deputy Commissioner of Police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X