திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூடு பிடிக்கும் குற்றாலம்.. கொட்டும் நீர் வீழ்ச்சிகள்.. குவியும் கூட்டம்.. படகு சவாரியும் ரெடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    குற்றாலம் அருவியின் நீர்வரத்து அதிகரிப்பு... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

    குற்றாலம்: குற்றாலத்தில் சீசன் சூடு பிடித்துள்ளது. அருவிகளில் நீர் கொட்டிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் படகு சவாரியும் அங்கு தொடங்கியுள்ளது.

    நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுத் தோறும் ஜூன், ஜுலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும். இந்த நாட்களில் இங்கே சுமார் 80 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர்.இவர்களின் வசதிக்காக ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ளது.

    boat ride begins in courtallam

    வென்ன மடைக் குளம். இந்த குளத்தில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகுக் குழாம் செயல்பட்டு வருகிறது. இங்கே 34 படகுகள் உள்ளன. இரண்டு பேர் பயணிக்க கூடிய படகுகள் 7,4 பேர் பயணிக்க கூடிய படகு 18,4 பேர் துடுப்பு படகு 5,தனிநபர் துடுப்பு படகு 4 உள்ளது.

    2 பேர் பெடல் போட்டுக்கு கட்டணம் அரைமணி நேரம் 120 ரூபாய், 4 இருக்கை படகுக்கு 150 ரூபாய், 4 பேர் துடுப்பு படகுக்கு 185 ரூபாய். தனிநபர் படகு 95 ரூபாய்.இங்கே போதிய பாதுகாப்பு கவசங்கள் உள்ளன. நேற்று இந்த படகு குழாமை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தொடங்கி வைத்தார்.ப டகு குழாமை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகரன் கூறியதாவது:

    boat ride begins in courtallam

    இப்பொழுது சீசன் காலம் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் நோக்கி வருகின்றனர். அவர்களின் வசதிக்காக குற்றாலம் ஐந்தருவியில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு குழாம் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், முற்றிலுமாக இதனை பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது .என்றும் மேலும் பாலிதீன் பை உள்ளிட்ட பொருட்களை தடைசெய்ய வேண்டும் அதை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய தீவிரமாக இருப்பதால் இதை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    boat ride begins in courtallam

    மேலும் சாரல் திருவிழா எப்போது தொடங்கும் என்பது பின்னர் மழையின் வரவை பொறுத்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்கள் பெய்யும் தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து கொட்டும். இந்த மழையின் காரணமாக சீசன் களைகட்டுவது வழக்கம்.

    இந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழை தாமதமாகத் தொடங்கியதால் சீசன் சற்று தாமதத்துடன் தொடங்கி இருக்கிறது. கடந்த வாரம் பெய்த பலத்த மழை காரணமாக அருவியில் வெள்ளம் உருவாகி குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன் பின் கடந்த 3 நாட்களாக குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழையில்லாத நிலையினால் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் மீண்டும் வறட்சியான நிலைய நீடித்து வருகின்றது. இதன் காரணமாக அருவிகளின் நகரமாக விளங்கும் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து என்பது முற்றிலுமாக குறைந்து மெயினருவியில் கொஞ்சமாக வரும் நீரில் சுற்றுலாப்பயணிகள் விடிய விடிய ஆனந்தமாக வரிசையில் நின்று குளித்து சென்று வருகின்றனர்.

    கடந்த சில நாட்கள் மலைப் பகுதிகளில் மழைஇல்லாததின் காரணமாக குற்றாலம் மெயினருவி,ஐந்தருவியில் தண்ணீர் வரத்து கொஞ்மாக கொட்டுவதால் விடுமுறை தினம் என்பதாலும் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் நீண்ட வரிசையில் நின்று ஆண்கள் மற்றும் பெண்கள் குளித்து செல்கின்றனர். அலைமோதும் விடுமுறையை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்த சுற்றுலாப்பயணிகள் கூட்டத்தால் குற்றாலம் திணறி வருகிறது. குற்றாலத்தில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாத நிலை மெயினருவியில் நீடித்து வருகின்றன.

    English summary
    Boat ride has begun in Courtallam as the season picks up.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X