திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிரையோஜெனிக் டெக்னாலஜில நம்ம சாதிக்க இன்னும் கொஞ்சம் டைம் ஆகும்.. விஞ்ஞானி நம்பி நாராயணன்

Google Oneindia Tamil News

குற்றாலம்: நிலவுக்கு அனுப்பப்படும் சந்திராயன்-2 விண்கலம் இம்முறை நிலவில் நேரடியாக இறங்கி ஆய்வு மேற்கொள்ளும் என்று விஞ்ஞானி நம்பி நாராயணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தென்காசியை அடுத்த குற்றாலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். இந்தியா மேற்கொண்டு வரும் விண்வெளி ஆய்வுகள் ஒவ்வொன்றையும், வளர்ந்த நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருவதாக நம்பி நாராயணன் கூறினார்.

chandrayaan-2 will directly descend in moon and exlpore ..Scientist Nambi Narayanan is proud

ஏற்கனவே அனுப்பிய சந்திராயன்-1 விண்கலம் சந்திரமண்டலத்தில் இறங்காமல் ஆய்வு நடத்தியதாக குறிப்பிட்டார் நம்பி நாராயணன்.

ஆனால் தற்போது அனுப்பப்பட உள்ள சந்திராயன்-2 , நிலவில் இறக்கப்பட்டு முக்கிய ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டார். நம்மோடு விண்வெளி ஆய்வில் ஒப்பிடக்ககூடிய வகையில் உள்ள நாடுகள் நம்மை பார்த்து அதிர்ச்சி, பொறைமை மற்றும் போட்டி மனப்பான்மை கொள்ளும் வகையில் இந்த ஆய்வு முடிவுகள் இருக்கலாம்.

ஏழைகளுக்கு வரப்பிரசாதம்.. மரக்காளானில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து.. பேராசிரியர் சாதனை ஏழைகளுக்கு வரப்பிரசாதம்.. மரக்காளானில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து.. பேராசிரியர் சாதனை

ஏனெனில் நிலவில் தரையிறங்க உள்ள சந்திராயன் 2 பல முக்கிய ஆய்வுகளை நிகழ்த்த உள்ளது என்றார். ஆனால் ஒன்றிரண்டு நாடுகளை தவிர விண்வெளி துறையில் நம்மோடு ஒப்பிடக்கூடிய அளவில் வேறு நாடுள் இல்லை என்றார் நம்பி நாராயணன்.

பிஎஸ்எல்வி ராக்கெட் இந்தியாவிற்கு ஒரு மைல்கல் என கூறிய அவர், ஜிஎஸ்எல்வி மாாக் ராக்கெட் திறன் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றார். கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் சாதனை படைக்க இன்னும் சில காலங்கள் நமக்கு தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

English summary
Scientist Nambi Narayanan has said that the Chandrayan-2 spacecraft sent to the moon will go directly descend to the Moon this time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X