திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்குநேரியில் நாங்களே நிற்போம்.. திமுகவுக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்.. அதிரடி தீர்மானம்

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்குநேரியில் நிற்க போவது யார்?.. நீடிக்கும் குழப்பம்- வீடியோ

    நெல்லை: நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உறுதியாக உள்ளதாக நெல்லையில் காங்கிரஸ் கட்சி பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நாங்குநேரி சட்டசபை தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அந்த தொகுதியில் எச் வசந்தகுமாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு அவரும் வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. இதில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவற்றில் கன்னியாகுமரி தொகுதியில் வேட்பாளராக எச் வசந்தகுமார் அறிவிக்கப்பட்டார்.

    ஒரே ஒரு அப்பாயின்ட்மென்ட்.. டோட்டல் பாண்டிச்சேரியிலும் கட்சி குளோஸ்.. அதிர்ச்சியில் தினகரன்!ஒரே ஒரு அப்பாயின்ட்மென்ட்.. டோட்டல் பாண்டிச்சேரியிலும் கட்சி குளோஸ்.. அதிர்ச்சியில் தினகரன்!

    ஆணையம்

    ஆணையம்

    இந்த தேர்தலில் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆகிவிட்டார். இதையடுத்து அவர் நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதியை காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    உதயநிதி கோரிக்கை

    உதயநிதி கோரிக்கை

    இதையடுத்து அந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்று வசந்தகுமாரிடம் கேட்ட போது திமுகவில் பேசி அந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், நாங்குநேரியில் திமுக போட்டியிட வேண்டும் என கூறியிருந்தார். அங்கு எஸ் திருநாவுக்கரசர் இருந்தார்.

    தீர்மானங்கள்

    தீர்மானங்கள்

    இந்த நிலையில் இன்று நெல்லை நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் எச் வசந்தகுமார், காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    அதில் முதல் தீர்மானமாக நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் உறுதியாக உள்ளது தெரிகிறது.

    இடைத்தேர்தல்

    இடைத்தேர்தல்

    சட்டசபையில் பலத்தை உயர்த்த திமுக முயற்சித்து வருகிறது. கடந்த மே மாதம் நடந்த 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 13 தொகுதியில் திமுக வெற்றி பெற்று தனது பலத்தை உயர்த்திகொண்டது. அது போல் எடப்பாடி பழனிச்சாமியின் அரசை கவிழ்ப்பதற்கு இது போன்ற சட்டசபை இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது தீர்வு என கருதுகிறது.

    அதிருப்தி

    அதிருப்தி

    திமுகவிடம் பேசி நாங்குநேரியை பெறுவோம் என கூறியிருந்த காங்கிரஸ் தற்போது தடாலடியாக திமுகவுக்கு விட்டுக் கொடுக்காமல் நாங்குநேரியில் போட்டியிட உறுதியாக உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி நிலவும் என தெரிகிறது.

    English summary
    Congress is going to contest in Nanguneri assembly constituency despite Udhayanidhi wants DMK to participate in that constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X