திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாங்குநேரி யாருக்கு.. நாமளே நிப்போம்.. மேலிடத்தை வலியுறுத்தும் காங்கிரஸ்

நாங்குநேரி இடைத்தேர்தலலும் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    H Vasantha Kumar: நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்- வீடியோ

    சென்னை: இப்பதான் ஒரு பொதுத் தேர்தலையும், இடைத் தேர்தலையும் சந்தித்து விட்டு ஓய்ந்தது தமிழகம். அதற்குள் இதோ, மீண்டும் ஒரு இடைத் தேர்தல் வாசல் கதவைத் தட்டி நிற்கிறது.

    நாங்குநேரி சட்டசபைத் தொகுதி காலியாகியுள்ளது. இத்தொகுதி காங்கிரஸ் வசம் இருந்த தொகுதியாகும். எச். வசந்தகுமார்தான் இதன் உறுப்பினராக இருந்தார்.

    ஆனால் வசந்தகுமாருக்கு எப்படியாவது எம்பி ஆகி விட வேண்டும். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியமைத்தால் மத்திய அமைச்சர் பதவியிலும் அமர்ந்து விட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது.

    பெரிய தப்பு பண்ணிட்டார் தினகரன்.. சசிகலா பேச்சை மட்டும் கேட்டிருந்தால்.. ரேஞ்சே வேறு! பெரிய தப்பு பண்ணிட்டார் தினகரன்.. சசிகலா பேச்சை மட்டும் கேட்டிருந்தால்.. ரேஞ்சே வேறு!

    மத்திய அமைச்சர்

    மத்திய அமைச்சர்

    லோக்சபா தேர்தலில் அவர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். வலுவான பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பண பலம், ஆள் பலத்தை இறக்கி விட வசந்தகுமாரே சரியானவர் என்பதால் கட்சி மேலிடமும் சீட் கொடுத்தது. போட்டியிட்டார். திட்டமிட்டு செயல்பட்டார். ஜெயித்தும் விட்டார்.

    குழப்பம்

    குழப்பம்

    நாங்குநேரி தொகுதியில் வசந்தகுமார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தற்போது அங்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதுவரை எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டுள்ளது. தற்போது இடைத் தேர்தலில் யார் போட்டியிடப் போவது என்ற குழப்பம் வந்துள்ளதாம்.

    கருத்து

    கருத்து

    காங்கிரஸ் கட்சியே இங்கு போட்டியிட விரும்புகிறதாம். நாமளே போட்டியிடுவோம். நமது தொகுதி இது. ஏற்கனவே சோளிங்கர் தொகுதி இடைத் தேர்தலில் அதை நாம் திமுகவுக்கு விட்டுக் கொடுத்தோம். ஆனால் நாங்குநேரியைத் தர வேண்டாம் என்று காங்கிரஸ் தரப்பு கருதுகிறதாம்.

    மும்முரம்

    மும்முரம்

    திமுக தரப்பில் வேறு யோசனையில் உள்ளனர். அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சட்ட ரீதியாக கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் விடாமல் பயன்படுத்துவதில் திமுக மும்முரமாக உள்ளது. அந்த அடிப்படையில் நாங்குநேரியில் திமுகவே போட்டியிட்டு வெற்றி பெற்றால், சட்டசபையில் அதிமுக பலத்தை மேலும் குறைக்க முடியும், நெருக்கடி ஏற்படுத்த முடியும் என திமுக கருதுகிறதாம்.

    விவாதம்

    விவாதம்

    விரைவில் இதுதொடர்பாக காங்கிரஸ் மேலிடத்துடன் திமுக தலைமை பேசவுள்ளதாம். அந்தப் பேச்சுவார்த்தையின்போது நாங்குநேரியில் திமுக போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாம். மறுபக்கம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யார் என்பது வரை யோசிக்க ஆர்பித்து விட்டதாம்.

    அமைதி

    அமைதி

    யார் போட்டியிடுவது என்பதில் பிரச்சினை வேண்டாம் பேசித் தீர்க்கலாம் என்ற அளவில் இந்தப் பிரச்சினை இப்போதைக்கு அமைதியாக இருப்பதாக இரு கட்சி வட்டாரத் தகவல்கள் சொல்கின்றன.

    English summary
    The Congress party has been insisting that it should contest again in the by-elections in Nanguneri Constitution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X