திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவால் புதிய சிக்கல்- கேரளாவில் மது குடிக்க முடியாமல் 7 பேர் தற்கொலை

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கொரோனாவால் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மது அருந்த முடியாத விரக்தியில் கேரளாவில் 7 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்க்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த லாக்டவுனை முழுமையாக அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Corona Lockdown: Upset Over Liquor Ban- Seven Persons Commit Suicide

லாக்டவுனால் மதுகடைகள் மூடப்பட்டுள்ளன. கேரளாவில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டிருப்பதால் குடிமகன்கள் பெரிதும் விரக்தி அடைந்துள்ளனர்.

மதுபானம் கிடைக்காத விரக்தியில் கேரளாவில் இதுவரை 7 பேர் தற்கொலை செய்திருப்பது புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் தற்கொலை முயற்சிகள் நிகழ்ந்துள்ளன. இவர்கள் மீட்கப்பட்டு போதை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கோட்டயம் அருகே மதுகுடிக்க முடியாத விரக்தியில் லாட்டரி சீட்டு விற்பனையாளர் ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

English summary
Accoriding to the media reports Seven Perosn Committed suicide for liquor ban in Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X