திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்

Google Oneindia Tamil News

Recommended Video

    மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்-வீடியோ

    தென்காசி: தென்மேற்கு பருவக்காற்றால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கேரளாவிலும் ஆர்ப்பரித்து கொட்டுகிறது மழை, இந்த மலைச்சாரல் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தையும் நனைத்து வருகிறது. இதன் காரணமாக த்ற்போது குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவுகிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.

    குற்றாலம் மெயின் அருவியான பேரருவியில் 60 மீ உயரத்தில் இருந்து மண்ணை முத்தமிட்டு செல்கிறது. மூலிகை அற்புதம் நிறைந்த இந்த அருவியில் நனைவதற்காக மக்கள் தமிழகம் முழுவதும் இருந்து படையெடுக்க தொடங்கிவிட்டார்கள்.

    courtallam session starts now, Best Time to Visit Courtalam falls

    குற்றாலத்தில் உள்ள மற்றொரு முக்கியமான அருவியாக சிற்றருவி உள்ளது. இதேபோல் செண்பகதேவி அருவி மற்றும் தேனருவி ஆகியவையும் உள்ளன.
    இத்துடன் ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி என மொத்தம் 9 அருவிகள் குற்றாலத்தில் உள்ளன.

    குற்றாலத்தில் பொதுவாக ஜுன் முதல் செப்டம்பர் வரை மக்கள் அதிக அளவு கூடுவார்கள் என்றாலும் ஜுன் இறுதி முதல் ஜுலை வரை தான் மிகப்பெரிய அளவில் தண்ணீர் வரத்தும், சில்லென்ற மழையும் அவ்வப்போது பெய்து கொண்டே இருக்கும். குறிப்பாக இப்போது சில்லென்ற சாரல் மழையும், இதமான சூழலும் குற்றாலத்தில் நிலவுகிறது.

    ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம் ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்

    இதன் காரணமாக தமிழகம் முழுவதில் இருந்தும் மக்கள் குற்றாலம் நோக்கி படையெடுத்து வருகிறார்கள். நேற்று மக்கள் வெள்ளத்தால் குற்றாலம் மிதந்து காணப்பட்டது. இந்த வார இறுதியில் இன்னும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    courtallam session starts now, this is Best Time to Visit Courtalam falls, all falls water level going well and also falls rainly
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X