திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெறிச்சோடும் அருவிகள்.. அடியோடு குறைந்து போன சுற்றுலாப் பயணிகள்.. காலி செய்யும் வியாபாரிகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் வெறிச்சோடும் அருவி-வீடியோ

    குற்றாலம்: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதாலும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை நின்று விட்டதாலும் அருவிப் பக்கம் போடப்பட்ட கடைகளை வியாபாரிகள் காலி செய்து வருகின்றனர்.

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    courtallam traders vacate shops

    நீர் வரத்து குறைந்து விட்டாலும் சீசன் முடிந்து விட்டாலும் கூட ஓரளவு சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்கத்தான் செய்கிறது. குறைந்தளவே விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

    குற்றாலம் மெயினருவியில் முற்றிலுமாக நீர்வரத்து வறண்டு விட்டதால் இன்னும் சில நாட்களில் நீர்வரத்து முற்றிலுமாக நின்று விடும் நிலையை எட்டியுள்ளது. மேலும் சபரிமலை சீசன் காலத்தில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்து செல்லும் பக்தர்கள் கூட்டம் சபரிமலை ஐயப்ப சீசன் முடிந்து விட்டதாலும் இனி அடுத்த ஜூன் மாதம் தான் சீசன் தொடங்கும்.

    courtallam traders vacate shops

    இதன் காரணமாக இங்கு ஏலம் எடுத்து கடைகள் போட்ட வியாபாரிகள் கடைகளை காலி செய்து வருகின்றனர். மொத்தத்தில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் மழையில்லாததால் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது. இன்னும் சில நாட்களில் நீர்வரத்து நின்று விடும் நிலை உள்ளது. குற்றாலம் வெறிச்சோட ஆரம்பித்துள்ளது.

    English summary
    Courtallam traders are vacating the shops as waterflow has come down in all falls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X