திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொள்ளையடித்த பணத்தை பாதுகாக்க மோடியை டாடி என்கிறார்கள்… சஞ்சய்தத் கடும் விமர்சனம்

Google Oneindia Tamil News

நெல்லை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்தவர்கள் தற்போது ஊழல் மூலம் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக பிரதமர் மோடியை டாடி என்று அழைக்கிறார்கள் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் தத் விமர்சித்துள்ளார்கள் .

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 90 சதவிகிதம் வரை பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் முடிந்து விட்டதாக தெரிவித்தார் .

Daddy Modi is to protect the money plundered; sanjay dutt Criticism

வருகிற 13ம் தேதி எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி பொதுக்கூட்டத்திற்கு வருவதாக தெரிவித்த அவர் , பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் அவற்றை மறைக்க பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருவதாகவும் கூறினர் .

அப்பா கேள்வி கேட்க.. மகன் பதில் சொல்ல.. ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் இன்டர்வியூவை பாருங்க! அப்பா கேள்வி கேட்க.. மகன் பதில் சொல்ல.. ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் இன்டர்வியூவை பாருங்க!

தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டபோதும் ஏற்பட்டபோதும் மக்களை சந்தித்த பிரதமர் மோடி தற்போது தேர்தலுக்கு அடிக்கடி தமிழகம் வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

முன்னதாக, ஊழலை பாதுகாப்பதில்தான் மோடி வலிமையானவர். நாட்டை பாதுகாப்பதில் அல்ல. நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில்தான் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகம். அதிகமான பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்து உள்ளனர் என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதேபோல், பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் பாஜக எம்.எல்.ஏ.க்களே ஈடுபட்டு உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

English summary
Why did Modi call as Daddy? Sanjay Dutt review
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X