திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனுஷ் எம்.குமார் - தென்காசி (தனி) திமுக வேட்பாளர் – 28 ஆண்டுகளுக்குப் பின் தென்காசியில் திமுக..!

தென்காசி தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் தனுஷ் எம்.குமார்.

Google Oneindia Tamil News

தென்காசி: தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் தனுஷ் எம்.குமார் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் எம்.குமார்(42). பி.இ., எம்.பி.ஏ., எல்.எல்.பி., படித்தவரான தனுஷ், இண்டேன் கேஷ் டீலராக இருக்கிறார். தேவேந்திர குல வேளாளரான இவர் விவசாயியும் கூட.

dhanush m kumar tenkasi dmk candidate biodata

இவரது தந்தை தனுஷ்கோடி, ராளபாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். தாய் இந்திரா, ராஜபாளையம் முன்னாள் ஊராட்சித் தலைவர்.

எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் - தஞ்சாவூர் திமுக வேட்பாளர்: 9வது முறையாக களமிறங்கும் வேட்பாளர்! எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் - தஞ்சாவூர் திமுக வேட்பாளர்: 9வது முறையாக களமிறங்கும் வேட்பாளர்!

கடந்த 1996ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வரும் தனுஷ், 10 ஆண்டுகளாக விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

1977-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம். அருணாச்சலம் தொடர்ந்து இங்கு வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார்.ன் பின்னர் அதிமுக வேட்பாளர் முருகேசன் 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 2004 மற்றும் 2009 ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் சி.பி.ஐ கட்சி இங்கு வெற்றி பெற்றது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் முருகேசனின் மனைவி வசந்தி முருகேசன் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தென்காசி மக்களவைத் தொகுதியில் இதுவரையில் தி.மு.க ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை. சுமார் 28 ஆண்டுகளுக்குப் பின் இத்தொகுதியில் மீண்டும் திமுக போட்டியிடுகிறது. இந்த வரலாற்றை மாற்றி தென்காசியில் தன் வெற்றிக் கொடியை தனுஷ் நாட்டுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Dhanush M Kumar - Tenkasi DMK candidate: Here is the details of this candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X