திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

28 ஆண்டுகளுக்கு பின்னர் தென்காசியில் திமுக போட்டி.. டஃப் கொடுக்க காத்திருக்கும் அமமுக

Google Oneindia Tamil News

தென்காசி: 28 ஆண்டுகளுக்கு பின்னர் தென்காசியில் திமுக போட்டியிடுவதால் நிச்சயம் வெற்றி பெறும் என திமுகவும், தினகரனின் முகமே எங்கள் சின்னம்தான், அதனால் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என அமமுகவும் நம்பிக்கையுடன் கூறிவருகின்றன.

காங்கிரஸின் கோட்டையான தென்காசி நாடாளுமன்றத் தேர்தலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியிடுகிறது. இது வரை அத்தொகுதியில் ஒரு முறைகூட போட்டியிட்டு வெற்றி பெற்றதில்லை.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா தேவதானம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் எம்.குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

சீனிவாசனுக்கு கோபம் வந்து பார்த்தது இல்லையே நீங்க.. திண்டுக்கல்காரங்க நேத்து பாத்தாங்க!சீனிவாசனுக்கு கோபம் வந்து பார்த்தது இல்லையே நீங்க.. திண்டுக்கல்காரங்க நேத்து பாத்தாங்க!

தனி மாவட்டம்

தனி மாவட்டம்

அப்போது அவர் கூறுகையில் தென்காசியினை தனிமாவட்டமாக மாற்றும் முயற்சியில் தனிக்கவனம் செலுத்தி வருகிறேன். விவசாயத்தை மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன். எல்லா வேட்பாளர்கள் போல வாக்குறுதிகளை அளித்துவிட்டு காணாமல் போகமாட்டேன்.

முன்னுரிமை

முன்னுரிமை

2 மாதத்திற்கு ஒரு முறை தொகுதி மக்களை சந்தித்து அவர்களது குறைகளை உடனடியாக தீர்ப்பேன். தென்காசி வழியாக இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்வேன். தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வண்ணம் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கைளை எடுப்பபேன் என்றார்.

பொன்னுதாய் பேட்டி

பொன்னுதாய் பேட்டி

தினகரன் முகமே எங்கள் சின்னம்: தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் பொன்னுத்தாய் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆலோசனை அறிமுகக் கூட்டம் மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் நடைபெற்றது.

இயற்கை எழில்

இயற்கை எழில்

இந்த கூட்டத்தில் பொன்னுத்தாய் கலந்து கொண்டு தன்னை வெற்றி பெற செய்வதற்காக அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் பொன்னுத்தாய் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் குற்றாலம் உள்ளது.

பல்வேறு வசதிகள்

பல்வேறு வசதிகள்

நான் உறுப்பினராக தேர்வு பெற்றவுடன் இந்த சுற்றுலாத் பகுதியை மேம்படுத்துவேன். மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வண்ணம் அனைவரையும் கவரும் பல்வேறு வசதிகளை செய்வேன்.

திட்டங்கள்

திட்டங்கள்

தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களையும் கொண்டுவருவேன். இதற்கு முன்பு வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தொகுதிக்குள் வரவுமில்லை. தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை.

ஜெயிப்பார் டிடிவி

ஜெயிப்பார் டிடிவி


ஆகவே நிச்சயமாக நாங்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவோம். தென்காசி பகுதியில் முதன்மை தொகுதியாக மாற்றி காட்டுவேன். மேலும் இடைத்தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் டிடிவி ஜெயிப்பார்.

எங்கள் ஆதரவின்றி ஆட்சியில்லை

எங்கள் ஆதரவின்றி ஆட்சியில்லை

முதல்வராக வருவார். தினகரனின் முகமே எங்களுக்கு சின்னம் என்றும் தெரிவித்தார். மேலும் மத்தியில் தங்களது கட்சியின் ஆதரவு இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
DMK is contesting in Thenkasi Loksabha constituency after 28 years. AMMK is also contesting in this constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X