திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொல்வது ரொம்ப ஈஸி... செய்யனும்ல... அது திமுகவால் தான் முடியும்... கமலுக்கு பதிலடி கொடுத்த கனிமொழி..!

Google Oneindia Tamil News

நெல்லை: இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்கப்படும் என்ற கமல்ஹாசனின் அறிவிப்புக்கு திமுக எம்.பி. கனிமொழி நெல்லையில் பதிலடி கொடுத்துள்ளார்.

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம் ஆனால் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

ஜனவரி மாதம் இறுதிக்குள் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி நிறைவடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

4 பேர் படங்களை தவிர வேறு யார் படமும் திமுக சுவரொட்டிகளில் இடம் பெறக் கூடாது -ஸ்டாலின் கடிதம்

நெல்லை மாவட்டம்

நெல்லை மாவட்டம்

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கனிமொழி, நெல்லை புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டார். அடிக்கல் நாட்டுவதுடன் அதிமுக ஆட்சியில் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் கைவிடப்படுவதாக சாடினார்.

 திமுக தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கை

மேலும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் இடத்திற்கு திமுக தான் வரும் என்றும் இதனால் மற்றவர்கள் சொல்வதை பற்றி தாங்கள் பெரிதாக கவலைக்கொள்ளத் தேவையில்லை என்றார். மக்களின் தேவைகள் அறிந்து திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெறும் என்றும் ஜனவரி மாதம் இறுதியில் அந்தப் பணிகள் முடிவடையும் எனக் கூறினார்.

10 ஆண்டுகாலம்

10 ஆண்டுகாலம்

பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.2500 கொடுத்துவிட்டால் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்த ஊழல்களை மக்கள் மறந்துவிடுவார்கள் என முதலமைச்சர் நினைப்பதாகவும் ஆனால் அது ஒரு போதும் நடைபெறாது எனவும் கனிமொழி கூறினார். அதிமுக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் காத்திருப்பதாக விமர்சித்தார்.

மக்களுக்கு உதவி

மக்களுக்கு உதவி

மேலும், கொரோனா காலத்தில் அரசு செய்திருக்க வேண்டிய மக்களுக்கான உதவிகளை திமுக தான் செய்தது என்றும் தொடர்ந்து காணொலி மூலமாக நிர்வாகிகளை சந்தித்து மக்கள் நல உதவிகளை முடுக்கிவிட்டவர் ஸ்டாலின் எனவும் கனிமொழி பெருமிதம் தெரிவித்தார்.

English summary
Dmk mp Kanimozhi counter attack to Mnm president kamalhassan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X