திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு உடம்பு சரியில்லை.. நான் எப்படி உமா மகேஸ்வரியை கொலை செய்ய முடியும்.. சீனியம்மாள் ஆவேசம்

உமா மகேஸ்வரி கொலையில் சீனியம்மாளிடம் விசாரணை நடந்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    நெல்லை மாநகர முன்னாள் மேயர் கொலை.. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..

    நெல்லை: முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியை கொன்றது வட மாநில கொலையாளிகள்தான் என்று சொல்லப்பட்ட நிலையில், திடீரென திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளை தேடி போலீசார் மதுரைக்கு பறந்தது குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக போலீசார், அங்குள்ள ஓட்டல்களில் போலீசார் சம்பவத்தன்று பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் ஒரே நேரத்தில் பாதியில் சாப்பிடாமல் அவசர அவசரமாக எழுந்து போனார்கள்.

    அந்த பெண் எழுந்து செல்லும் நேரத்துக்கும், உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட நேரத்துக்கும் போலீசார் சந்தேகித்தனர். அதன்படி அந்த பெண் யார் என்று சிசிடிவி பதிவுகளை வைத்தும் கண்டுபிடித்தபோதுதான் தெரிந்தது அவர், மதுரையை சேர்ந்த திமுக பிரமுகரான சீனியம்மாள் என்பவர்.

    "இவர்"தான் உமா மகேஸ்வரியை கொன்றாரா.. இதுதான் காரணமா.. திணறலில் உமா மகேஸ்வரி கொலை வழக்கு!

    கோபம்

    கோபம்

    யார் இந்த சீனியம்மாள்.. திமுக மகளிரணி அமைப்பாளராக இருந்தவர்தான் சீனியம்மாள். சமகவுக்கு சென்றுவிட்டு திரும்பவும் திமுகவுக்கு திரும்பியவர். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் சங்கரன் கோவில், வாசுதேவநல்லூர் என இந்த 2 தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட விரும்பியவர். அதற்காக அப்போது தலைமைக்கு நெருக்கமாக இருந்த உமா மகேஸ்வரி மூலமாக சீட் கேட்டு முயற்சித்துள்ளார். எப்படியாவது சீட் கிடைக்கும் என்று கடைசி வரை முயற்சித்தும் கிடைக்காமல் போனதால், உமா மகேஸ்வரி மீது சீனியம்மாளுக்கு கோபம் இருந்ததாகவும் சொல்கிறார்கள்.

    விசாரணை

    விசாரணை

    இதன்காரணமாகவே இந்த கொலை நடந்திருக்குமோ என்ற கோணத்தில்தான் போலீசார் நேற்று சீனியம்மாளை விசாரிக்க மதுரைக்கு சென்றார்கள். துருவி துருவி விசாரணை நடத்தியும் எதுவுமே முன்னேற்றம் கிடைக்கவில்லை போலும்.

    உடம்பு சரியில்லை

    உடம்பு சரியில்லை

    போலீசார் தன்னிடம் நடத்திய விசாரணை பற்றி சீனியம்மாளே செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது "2 முறை வந்து போலீசார் விசாரிச்சாங்க. ஏன் சார் என்னை வந்து விசாரிக்கிறீங்க.. எனக்கு உடம்பு சரியில்லை. கூடல்நகரில் இருக்கிற என் மகள் வீட்டுக்கு நான் வந்திருக்கிறேன். வந்த இடத்தில் நான் எப்படி இப்படியெல்லாம் செய்ய முடியும்? என்று கேட்டேன். அதற்கு போலீசார், பல்வேறு கோணங்களில் எல்லாரையும் விசாரிக்கிற மாதிரிதான் உங்களையும் விசாரிக்கிறோம்னு சொன்னாங்க.

    குற்றவாளிகள்

    குற்றவாளிகள்

    ஆனால், யாரோ ஒருவர் தூண்டிவிட்டுதான் என்னிடம் வந்து இந்த விசாரணையை நடத்துகிறார்கள். அப்படியே இருந்தாலும், உமா மகேஸ்வரி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், நான் மாநில துணை செயலாளர்.. அவருகிட்ட போய் நான் நிக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை. ஆனால் என் வளர்ச்சியை பிடிக்காம யாரோ இப்படி பண்ணிட்டு இருக்காங்க. நான் என்ன சொல்லிக்கிறேன்னா.. உண்மையான குற்றவாளியை தப்ப விட்டுடாதீங்க" என்றார்.

    English summary
    DMK woman executive Seeniayammals explanation in Nellai Ex Mayor Uma Maheswri Murder Case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X