திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரலாற்றில் முதல் முறையாக நாங்குநேரி ஒன்றியத்தை கைப்பற்றியது திமுக!

Google Oneindia Tamil News

திருநெல்லிவேலி : நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை முதல் முறையாக திமுக கைப்பற்றி உள்ளது. திமுகவைச் சேர்ந்த சவுமியா எட்வின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சவுமியா எட்வின் கணவர் ஆரோக்கிய எட்வினும் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு அக்டோபர் ஆறு மற்றும் ஒன்பது ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது

கொலை, போக்சோ வழக்குகள், குற்றச்செயல்...6 வழக்கறிஞர்களுக்கு தடை...பார்கவுன்சில் அதிரடி கொலை, போக்சோ வழக்குகள், குற்றச்செயல்...6 வழக்கறிஞர்களுக்கு தடை...பார்கவுன்சில் அதிரடி

இதில் 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் 22581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தமாக 27,003 தேர்தல் அறிவிக்கப்பட்டது.

5 பதவியிடங்கள்

5 பதவியிடங்கள்

இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2874 பதவியிடங்களும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிடங்களில் 119 பதவியிடங்களும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் போட்டியின்றி நிரப்பப்பட்டன.

முடிவுகள் அறிவிப்பு

முடிவுகள் அறிவிப்பு

மேலும், ஒரு கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடம் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடத்திற்கும் 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கும் போட்டியிட யாரும் முன்வரவில்லை என்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 23 ஆயிரத்து 978 பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் பெரும்பாலான இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே கைப்பற்றின

போட்டின்றி

போட்டின்றி

இந்நிலையில் திருநெல்வேலி, தென்காசி உள்பட 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல் நடந்தது. இந்த மறைமுக தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வாக்களித்து உறுப்பினர்களை தேர்வு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்டமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பல இடங்களை திமுகவே போட்டியிட்டின்றி வெற்றி பெற்றுள்ளது.

நாங்குநேரி

நாங்குநேரி

வரலாற்றில் முதல்முறையாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை முதல் முறையாக திமுக கைப்பற்றி உள்ளது. நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த பதவிக்கு நாங்குநேரி கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின் மனைவி சவுமியா எட்வின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆரோக்கிய எட்வினும் கவுன்சிலராக வெற்றி பெற்றுளளார்.

English summary
The DMK has for the first time taken over the post of Nanguneri Panchayat Union Committee Chairman. Sawmiya Edwin of DMK has been selected without contest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X