திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் எந்த கட்சியை அரியணையில் ஏற்ற வேண்டும் என்று மக்களுக்குத் தெரியும் - முதல்வர்

அரியணை யாருக்கு என்பதை தமிழக மக்கள் முடிவு செய்வார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். திருநெல்வேலியில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதல்வர் பழனிச்சாமி ஸ்டாலின் சபதம் பற்றிய கேள

Google Oneindia Tamil News

நெல்லை: ஆறாவது முறையாக திமுகவை அரியணையில் ஏற்றுவோம் என்று கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் சபதம் ஏற்றிருக்கும் நிலையில் அரியணை யாருக்கு என்று மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த காலத்திலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரொம்ப பிசியாகவே இருக்கிறார். மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளையும் அளித்து வருகிறார். திண்டுக்கல், மதுரை பயணத்தை முடித்துக்கொண்டு இன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார் முதல்வர் பழனிச்சாமி. தொடர்ந்து தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். மகளிர் சுய உதவிக் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி,

Edapadi Palanisamy inaugurate 20 projects in Tirunelveli, Tenkasi

தென்மாவட்டங்களில் தொழில் தொடங்க முன் வருபவர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்படும் என்று கூறினார். 275 கோடி
மதிப்பிலான திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்த முதல்வர் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். வீட்டுமனைப் பட்டா, அம்மா இருசக்கர வாகனம், வேளாண்மை எந்திரங்கள் என அனைத்து துறைகளின் சார்பில் 5 ஆயிரத்து 982 பயனாளிகளுக்கு சுமார் 36 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, தென்காசி மாவட்டத்தில் ஏராளமான தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். தென்காசி மாவட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 82.27 கோடி ரூபாய் கடன் உதவி அளிக்கப்படும்.

கொரோனா தடுப்பு பணியிலுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். அவசர கால மருத்துவ பணியாளர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றார்

கொரோனா வைரஸ்...நீட்சியாக முக பக்கவாதம்...எப்படி அறிவது...மும்பையில் தாக்கம்!!கொரோனா வைரஸ்...நீட்சியாக முக பக்கவாதம்...எப்படி அறிவது...மும்பையில் தாக்கம்!!

1500 பேர் வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய தொழிற்சாலைகள் துவங்க உள்ளன. 14 நிறுவனங்கள் தங்கள் தொழிலை துவங்கி உள்ளன. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உணவு பூங்கா அமைக்கப்பட உள்ளது என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி. புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின்படி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். EIA எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றாலும் அது எளிமையாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததும் பொது போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் கூறினார்.

திமுகவை அரியணையில் ஏற்ற மு.க.ஸ்டாலின் சூளுரைத்தது பற்றிய கேள்விக்கு, தமிழகத்தில் எந்த கட்சியை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வார்கள் என்று பதில் அளித்தார்.

தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆறாவது முறையாக திமுகவை அரியணை ஏற்றுவோம் என்று அவரது நினைவிடத்தில் சபதம் செய்துள்ளார் ஸ்டாலின். இது தொடர்பான வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இது பற்றி இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் தரும் விதமாக மக்களுக்கு தெரியும் யாரை அரியணையில் ஏற்றுவது என்று கூறியுள்ளார் முதல்வர்.

English summary
Chief Minister Edappadi K. Palaniswami on Friday inaugurate 20 projects and laid foundation stone for eight schemes in Tirunelveli and Tenkasi districts. Chief Minister also disburse welfare assistances worth Rs. 20 crore to 2,800 beneficiaries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X