திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ. 1.88 லட்சம் பறிமுதல்.. காய் வாங்கக் கொண்டு போன பணத்தையும் பறிக்கிறார்களே.. வியாாரிகள் வருத்தம்

Google Oneindia Tamil News

Recommended Video

    காய் வாங்கக் கொண்டு போன பணத்தையும் பறிக்கிறார்களே.. வியாாரிகள் வருத்தம்

    தென்காசி:தென்காசி அருகே பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ஆட்டோவில் உரிய கணக்கு இல்லாமல் கொண்டு வரப்பட்ட 1 லட்சத்து 88 ஆயிரத்தி 760 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் அன்பளிப்பாக கொடுப்பதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    Election officials seizes un accounted money from an auto near tenkasi

    அதன்படி செங்கோட்டை- தென்காசியில் மர அறுவை ஆலையின் அருகே தென்காசி சமூக நலத்திட்ட தாசில்தார் வெற்றிச்செல்வி,தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜாராமன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கேரளமாநிலத்தில் காய்கறி விற்பனை செய்துவிட்டு வந்த திப்பனம் பட்டியை சார்ந்த ஐயப்பன் என்பவரது ஆட்டோவில் சோதனை நடத்தப்பட்டது.


    Election officials seizes un accounted money from an auto near tenkasi

    சோதனையில் அந்த ஆட்டோவில் உரிய கணக்கு இல்லாமல் இருந்த ரூபாய் 1 லட்சத்து 88 ஆயிரத்தி 760 ரூபாயை பறிமுதல் செய்து தென்காசி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். நெல்லைமாவட்டம் ஆலங்குளம், பாவூர் சத்திரம், கீழப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகளிடம் கொள் முதல் செய்த காய்கறிகளை ஏற்றிக்கொண்டு நூற்றுக்கணக்கான வாகனங்களில் தினமும் கேரளாவுக்கு சென்றுவிட்டு வருகிறது.

    Election officials seizes un accounted money from an auto near tenkasi

    இதுபோன்ற வாகனங்களில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட பணமே கொண்டு வரப்படுகிறது. எனவே, அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    Election officials seizes un accounted money from an auto near tenkasi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X