திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊரடங்கை தனக்கு சாதகமாக பயன்படுத்தி.. தாமிரபரணி ஆற்றில் ஆனந்த குளியல் போடும் "நிர்மலாதேவி"

Google Oneindia Tamil News

நெல்லை: கொரோனா காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் ஆள் இல்லாத தாமிரபரணி ஆற்றில் ஆனந்தமாக குளியல் போடுகிறது நிர்மலாதேவி யானை.

Recommended Video

    Elephant Nirmala Devi enjoying natural river bath at 'Thamirabarani' river

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள முக்கூடல் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் வழக்கமாகவே நூற்றுக்கணக்கானோர் நாள்தோறும் குளித்து குதூகலமாக இருப்பர்.

    Elephant Nirmala Devi takes bath in Thamirabharani river in Nellai

    மற்ற இடங்களை விட இந்தப் பகுதியில் மணல் நிறைந்த பகுதிகளாக குளிக்க ஏற்றத்தக்கவாறு இருக்கும். இந்த நிலையில் தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.

    இதனால் சாலைகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட கூடாது என அறிவிப்பும் உள்ளது. இதனால் கடற்கரைகள், ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் யாருமே இல்லாமல் ஆள் அரவமின்றி காட்சியளிக்கிறது.

    Elephant Nirmala Devi takes bath in Thamirabharani river in Nellai

    வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில் ஆள்நடமாட்டம் இல்லாமல் உள்ளது. இங்கு பொட்டல்புதூரை சேர்ந்த ஒருவரது யானை தனது பாகனுடன் வந்தது. அதன் பெயர் நிர்மலா தேவி. தனக்கென நதி இருப்பதுபோல் நினைத்துக் கொண்டு அந்த யானை ஆனந்த குளியல் போட்டது. ட்ரோன் எனப்படும் பறக்கும் கேமரா கொண்டு படமாக்கப்பட்ட இந்த காட்சி காண்பவரை பிரமிக்க வைத்தது.

    English summary
    Elephant Nirmala Devi takes bath in Thamirabharani river in Nellai. She took bath freely as no people movement there.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X