திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போன மாசமே இசக்கி சுப்பையா தாவியிருப்பார்.. ஆனால் வரலை.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    நெல்லை: அ.தி.மு.கவில் இணைகிறார் இசக்கி சுப்பையா .! அமமுக தலைமை அலுவலகம் பறிபோகிறது!

    நெல்லை: முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா போன மாதமே அதிமுகவுக்கு வந்து சேர்ந்திருப்பார். ஆனால் டக்கென கிளம்பிப் போனால் கெத்து இருக்காது என்பதால்தான் பில்டப் கொடுத்து விட்டுச் செல்கிறாராம்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர் இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    esakki subbaiah gives build up before leaving Ammk

    வருகிற 6ம் தேதி முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் தென்காசியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்முக கட்சியினர் 20 ஆயிரம் பேருடன் அதிமுகவில் இணைகிறார்.

    இசக்கி சுப்பையா டிடிவி தினகரன் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு உடையவர். டிடிவி தினகரன் முக்கிய ஆலோசனை கூட்டங்கள் அனைத்தும் இவர் இடத்தில் தான் நடப்பது வழக்கம். பாராளுமன்ற தேர்தலில் அமமுக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டார். 2011ல் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டத்துறை அமைச்சராகவும் இருந்தவர். இந்நிலையில் அமமுக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளார்.

    நேற்று குற்றாலத்தில் உள்ள தனது ரிசார்ட்டில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மனம் விட்டுப் பேசினார். தினகரன் குறித்துக் குமுறினார். உண்மையில் போன மாதமே இசக்கி சுப்பையா அதிமுகவில் சேர்ந்திருக்க வேண்டியது. ஆனால் சேரவில்லை. கடந்த மாதம் தனது ஆதரவாளர்களை திடீரென இரவில் அழைத்து ரிசார்ட்டில் அமர்ந்து ஆலோசனை நடத்தினார்.

    இதனால் அவர் கட்சி மாறப் போவதாக பரபரப்பு கிளம்பியது. இந்த பரபரப்பு கிளம்ப வேண்டும் என்றுதான் அந்தக் கூட்டமே நடந்ததாம். அதிமுகவுக்கு போக வேண்டும் என்று அவர் அப்போதே முடிவெடுத்து விட்டாராம். ஆனால் உடனே கிளம்பிப் போனால் ஒரு கெத்து இருக்காது என்பதால் முதலில் ஆலோசனை பிறகு பிரஸ் மீட் என்று திட்டமிட்டு அவர் செயல்பட்டுள்ளாராம். அப்போதுதான் அதிமுக வட்டாரமும் அதிரும், அமமுகவும் பதரும் என்பது அவரது திட்டமாம்.

    English summary
    Former Minister Esakki Subbaiah had decided to join AIADMK last month itself, but he delayed his decision to make a build up.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X