திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புளியரை டூ மதுரை 4 வழிப் பாதை.. நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: வாசுதேவநல்லூரில் நான்கு வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திமுக, சி.பி.எம்., மதிமுக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும்.விவசாயிகளும் என சுமார் 1000 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், நெல்லை மாவட்டம் புளியரை முதல் மதுரை மாவட்டம் திருமங்கலம் வரை 147 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தபட்டுள்ளது.

farmers and parties protest against land acquisition for highways

நெல்லை மாவட்டத்தில் மட்டும் 818 ஏக்கர் அளவுக்கு நெல் விளையும் நன்செய் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. முதல்கட்டமாக ராஜபாளையம் சத்திரப்பட்டியில் தொடங்கி மீனாட்சிபுரம், இனாம் கோவில்பட்டி, விஸ்வநாதப்பேரி, சிவகிரி, உள்ளார், வாசுதேவநல்லூர், கடையநல்லூர்,செங்கோட்டை தாலுகா, பகுதிகளில் நெல் நடவு செய்துள்ள வயல்களில் கடந்த மாதம் வரை முன் அடையாள குறியீட்டு கற்கள் நடும்பணிகள் நடைபெற்றன.

இந்த நான்கு வழிச்சாலை திட்டம் விவசாயிகள் மத்தியில் கடும்கொந்தளிப்பை உருவாக்கியது. அந்தந்த ஊர்களிலுள்ள தாலுகா அலுவலகங்களை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டங்களையும், அதிகாரிகள் நடத்திய கருத்துக்கேட்ப்பு கூட்டங்களையும் புறக்கணித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகளும், பொதுமக்களும் முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினர்.இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் விரைவில் உங்களது கோரிக்கையை பரிசீலித்து அரசுக்கு அனுப்பப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

farmers and parties protest against land acquisition for highways

இந்த நிலையில் சென்னை உயர்நிதிமன்ற மதுரைக்கிளையில் இந்த விவகாரம் குறித்து வழக்கும் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் நான்கு வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திமுக, சி.பி.எம்., மதிமுக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும். விவசாயிகளும் என சுமார் 1000 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

English summary
Thousands of farmers and party cadres staged a protest against 4 lane road.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X