திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது.. ஒரே நாளில் ரூ. 1 கோடி பணம் சிக்கியது!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம் முழுவதும் பண வேட்டை... ஒரே நாளில் ரூ. 1 கோடி பணம் சிக்கியது!

    திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் பண வேட்டையில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் இறங்கியுள்ளனர். ஒரே நாளில் ரூ. 1 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்து விட்டன. இதன் ஒரு கட்டமாக வாகனத் தணிக்கையில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.

    Flying squads recover nearly Rs 1 crore cash

    தேர்தல் நடைபெறும் தமிழகம் முழுவதும் வாகன சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதற்காக செக் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு பறக்கும் படையினர் தீவிர சோதனைகளில் ஈடுபடுகின்றனர். கானூர் என்ற இடத்தில் ரூ. 50 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது நெல்லை மாவட்டத்தில் ரூ. 20 லட்சம் பறிமுதலாகியுள்ளது.

    அதிரடி திருப்பம்.. திருப்பரங்குன்றம் வழக்கை திரும்ப பெறுகிறேன்.. திமுக சரவணன் ஆணையத்திற்கு கடிதம்!அதிரடி திருப்பம்.. திருப்பரங்குன்றம் வழக்கை திரும்ப பெறுகிறேன்.. திமுக சரவணன் ஆணையத்திற்கு கடிதம்!

    நெல்லை மாவட்ட ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்தில் வி.கே.புதூர் சமுக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கோமதி சங்கரநாராயணன் தலைமையில் பறக்கும் படை வாகன சோதனைநடத்தினர். இந்த சோதனையின் போது ஒரு இனோவா கார் வந்தது. அந்த காரை முழுமையாக சோதனையிட்டதில் காரிலிருந்து19 இலட்சத்து 94ஆயிரத்தி 500 ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    தூத்துக்குடியை சேர்ந்த சங்கரிடம் நடத்திய விசாரணையில் பணம் கொண்டு செல்வதற்க்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததைத்தொடர்ந்து 19 இலட்சத்து 94ஆயிரத்தி 500 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதே போல தமிழகத்தில் மேலும் சில இடங்களிலும் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஒரே நாளில் ரூ. 1 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    English summary
    Election commission Flying squads have recovered nearly Rs 1 crore cash in surprise vehicle checks in various places.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X