• search
திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அம்மாடி! 12 அடி நீள ராஜநாகம்.. கொஞ்சம் மிஸ்ஸானாலும் க்ளோஸ் தான்.. வைரலாகும் வனத்துறையினரின் வீடியோ

Google Oneindia Tamil News

தென்காசி: விவசாய பண்ணைக்குள் நுழைந்த சுமார் 12 அடி நீளமுள்ள ஆண் ராஜநாகத்தை வனத்துறை அலுவலர்கள் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

  அம்மாடி! 12 அடி நீள ராஜநாகம்.. கொஞ்சம் மிஸ்ஸானாலும் க்ளோஸ் தான்.. வைரலாகும் வனத்துறையினரின் வீடியோ

  நாகப்பாம்புகள் வகைகளில் கடுமையான விஷம் கொண்டது ராஜநாகம் ஆகும். ஆங்கிலத்தில் "கிங் கோப்ரா" என்று அழைக்கப்படுகிறது.

  வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு! வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!

  உலகத்திலேயே மிகவும் நீளமான விஷப்பாம்பும் இதுதான். மூன்று அடியிலிருந்து சுமார் 15 அடிக்கும் மேல் வளரக்கூடியது.

   ராஜநாகம்

  ராஜநாகம்

  பொதுவாகவே பாம்பு என்றால் படையே நடுக்கும் என்பார்கள், ஆனால் ராஜ நாகத்தைப் பொறுத்தவரை அது கொத்த வேண்டாம், அதனை நேரில் பார்த்தே பலர் பயத்தில் உயிரிழந்து உள்ளனர். அந்த அளவுக்கு மிரட்டும் தன்மை கொண்டது ராஜ நாகம். இவ்வகையான பாம்புகள் அதிக அளவில் மழை பெய்யும் இடங்கள், அடர்ந்த புதர்செடிகளைக் கொண்ட காடுகள், சதுப்பு நிலங்களில் இவை வாழ்கின்றன.

   12 அடி நீள ராஜநாகம்

  12 அடி நீள ராஜநாகம்

  சீனா, பிலிப்பைன்ஸ் தீவுகள், இந்தோனேசியா, மலேசியா, மியான்மார் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் இவை வாழ்கின்றன. இந்நிலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கடையம் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட ஒரு விவசாய பண்ணையில் சுமார் 12 அடி நீளமுள்ள ஆண் ராஜநாக பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடினர்.

   வனத்துறையினர்

  வனத்துறையினர்

  பின்னர் இது குறித்து கடையம் வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இது சம்பந்தமாக அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் சே.செண்பகப்பிரியா, மற்றும் பொறுப்பு வனச்சரக அலுவலர் சரவணகுமார் வழங்கிய உத்தரவு மற்றும் அறிவுரையின் பேரில் சிவசைலம்பிரிவு வனவர் முருகசாமி, கோவிந்தபேரி பீட் வனக்காவலர் வீரணன், வேட்டைத் தடுப்புக்காவலர்கள் பேச்சிமுத்து, வேல்ராஜ். வேல்சாமி, மனோஜ்குமார். பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பாம்பைப் பத்திரமாகப் பிடித்தனர்.

   வைரல் வீடியோ

  வைரல் வீடியோ

  பின்னர் ஒருவர் பாம்பின் வாய்ப்ப குதியை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள, மற்ற வேட்டைத்தடுப்புக்காவலர்கள் இணைந்து அதனை ஒரு கோணிப் பைக்குள் மிகவும் லாவகமாகப் போட்டுச் சென்று, சிவசைலம்பீட் கல்லாறு பகுதிக்குச் சென்று விட்டனர். 12அடி ராஜநாகம் பத்திரமாக மீட்கப்பட்டதால் விவசாய பண்ணையில் இருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

  English summary
  The Forest department caught 12 foot King cobra. king Cobra latest viral video.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X