திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடம்பு சரியில்லாமல் இறந்து போனது வள்ளி.. பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    இறந்து போனது வள்ளி! பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்

    நெல்லை: நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி குமரன் ஆலயத்தில் 2006ம் ஆண்டு கடம்பூர் ஜமீன் சார்பில் வள்ளி, தெய்வானை என இரண்டு குட்டி யானைகள் கோவிலுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. அதில் வள்ளி யானை உடம்பு சரியில்லாமல் இறந்து போய் விட்டது.

    அந்த இரண்டு யானைகளுக்கும் உணவுகள் கொண்டு வருவதற்காக மாட்டு வண்டி மாடுகள் மற்றும் தேவையான அளவிற்கு பணம் அனைத்தும் டெபாசிட் செய்யப்பட்டு ஆலய நிர்வாகத்தில் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தெய்வானை என்கின்ற யானை பாலீதீன் கவரை உட்கொண்டு ஜீரனம் ஆகாமல் 2008 ஆம் ஆண்டு பலியானது.

    Ilanji Kumaran temple elephant dies

    தற்போது வள்ளியும் உடம்பு சரியில்லாமல் போய் இறந்து விட்டது. ஏற்கனவே உடம்பு சரியில்லாமல் மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்டு இருந்த நிலையில் போதிய சிகிச்சை பலன் பராமரிப்பு செய்யப்படாமலும் இருந்து வந்தது. இந்த நிலையில் யானைப்பாகன் நேற்று மாலை 6.30 மணி அளவில் யானையை கோவிலை சுற்றி அழைத்து வந்தார். அப்பொழுது யானை திடீரென மயங்கி விழுந்தது.

    இதனைக் கண்டு பதறிப்போன யானைப்பாகன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே மருத்துவர்கள் விரைந்து வந்து யானையை பரிசோதித்து பார்த்ததில் யானை பலியானது தெரியவந்தது. இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவி பற்றி பரவி ஏராளமான பக்தர்கள் விரைந்து வள்ளி யானைக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் காலையில் கிரேன் மூலம் யானையை அடக்கம் செய்யும் பகுதிக்கு கொண்டுவந்து அங்கே கால்நடை சிறப்பு மருத்துவர் சுகுமார் தலமையில் மருத்துவர் அர்னால்ட் உள்ளிட்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்து வந்தனர்.

    முறைப்படி யானையின் தந்தம் வெட்டி எடுக்கப்பட்ட பின்னர் பக்தர்களின் கண்ணீர் அஞ்சலி டு மலர் தூவி வனத்துறையினர் கிரேன் மூலம் தெய்வானை யானை அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகில் வள்ளியையும் அடக்கம் செய்தனர்.

    English summary
    Ilanji Kumaran temple elephant Valli died and temple officials buried the elephant with due respects.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X