திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மர வேர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்ட பச்சிளம் குழந்தை.. துடித்துக் கதறிய கொடுமை.. நெல்லை அருகே!

குளக்கரையில் பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    மர வேர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்ட பச்சிளம் குழந்தை

    நெல்லை: குளக்கரையில் மரத்தின் வேர்களுக்கு நடுவே உயிருடன் கிடந்த பெண் குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். குழந்தையை இப்படி வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே பாலாமடை கட்டளையில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் கரையில் பனங்காடுகள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து இன்று காலை குழந்தையின் அழுகுரல் சத்தம் ஒன்று கேட்டு கொண்டே இருந்தது.

    In a few hours of birthBaby girl rescue near Nellai

    இதனால் அந்த வழியாக சென்றவர்கள், சுற்றுமுற்றும் பார்த்தபோதுதான் அங்குள்ள மரத்தின் வேர்களுக்கு இடையில் பச்சிளம் பெண் குழந்தையை யாரோ உயிருடன் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

    தமிழகம்..புதுவை காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை தமிழகம்..புதுவை காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சிகிச்சையில் உள்ள குழந்தை நலமாக இருப்பதாகவும், பரிசோதனைக்கு பின்னர் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    In a few hours of birthBaby girl rescue near Nellai

    குழந்தையின் பெற்றோர் யார், எதற்காக குழந்தையை குளத்தின் அருகே வீசிச் சென்றனர், பெண் குழந்தை என்பதால் வீசிச் சென்றனரா என்பது குறித்து சீவலப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    Infant rescued near the Pond by Thirunelveli Police and investigation is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X