திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கயத்தாறு அருகே ஆடு மேய்ந்ததற்காக தலித்தை காலில் விழவைத்த கொடூரம்- வீடியோ வெளியிட்ட திருமாவளவன்

Google Oneindia Tamil News

நெல்லை: கயத்தாறு அருகே ஓலைக்குளம் கிராமத்தில் ஆடுகள் மேய்ந்துவிட்ட காரணத்தாக தலித் ஒருவரை ஆதிக்க சாதியினர் காலில் விழ வைத்த கொடூர வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ஆதிக்க ஜாதியினர் 7 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    தலித் இளைஞரை துன்புறுத்திய ஆதிக்க சாதியினர்.. திருமா வெளியிட்ட வீடியோ

    தமிழகத்தில் இரட்டை டம்ளர் முறை, உள்ளாட்சி அமைப்புகளில் தலித்துகள் புறக்கணிப்பு, கவுரவ படுகொலை என்கிற பெயரில் ஜாதிவெறி படுகொலைகள் ஆகியவை தொடர் கதையாகி வருகின்றன. கட்சிகள் பாகுபாடின்றி ஆதிக்க ஜாதி வெறியினரால் இத்தகைய சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

    Inhuman act against Dalit near Kayatharu

    இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், #அநாகரிகம்: வட இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டிலும் தொடரும் அநாகரிகம். கயத்தாறு அருகே ஓலைக்குளம் கிராமம் ஆதிக்குடியினத்தைச் சார்ந்தவரின் ஆடுகள் தங்களின் கொல்லைப் பகுதியில் எப்படி நுழையலாமென இந்தக் கேவலத்தை அரங்கேற்றியுள்ளனராம் என குறிப்பிட்டு வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.

    சங் பரிவாரங்களால் ஓட விடப்பட்டீர்களே.. மறந்துட்டீங்களா குஷ்பு.. நினைவூட்டும் பெரியாரிஸ்டுகள்!சங் பரிவாரங்களால் ஓட விடப்பட்டீர்களே.. மறந்துட்டீங்களா குஷ்பு.. நினைவூட்டும் பெரியாரிஸ்டுகள்!

    இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பால்ராஜ் என்ற தலித்தை ஆதிக்க ஜாதியினர் காலில் விழவைத்திருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து பால்ராஜை காலில் விழவைத்த 7 பேரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    English summary
    Inhuman act against Dalit near Kayatharu. Now Police register cases against 7 persons under SC ST Act.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X