திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடூர கொலை.. புதைக்கப்பட்ட வித்யா.. மீண்டும் உடலை தோண்டி மறுபிரேத பரிசோதனை.. வள்ளியூரில் பரபரப்பு

சடலத்தை தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட்டது

Google Oneindia Tamil News

நெல்லை: உறவுக்கு தடையாக இருந்த மனைவியை, கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொலை செய்து காட்டு பகுதியில் வீசினார் கணவர்.. இதையடுத்து வள்ளியூர் போலீசாரால் புதைக்கப்பட்ட அந்த பெண்ணின் சடலத்தை கேரள போலீசார் மீண்டும் தோண்டி எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்தனர்.

கேரளா கோட்டையம் பகுதியை சேர்ந்த தம்பதி பிரேம்குமார் - வித்யா. சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமார் தன்னுடன் படித்த பள்ளி தோழி சுனிதாவை சந்தித்தார்.. இருவரும் நெருங்கி பழகினர்.. சுனிதா கணவனை விட்டு பிரிந்தவர்.. அதேபோல, பிரேம்குமாருக்கும் வித்யாவை பிடிக்காது.

இதனால் சுனிதாவும் - பிரேம்குமாருக்கும் காதல் பற்றி கொண்டது.. இருவரும் ஒன்றாக சந்தோஷமாக வாழ நினைத்தனர். இதற்கு வித்யா தடையாக இருக்கவும் அவரை கொலை செய்ய முடிவு செய்தனர்.

டாக்டர் மட்டுமல்ல.. மேலும் 9 பேரை அதே பாணியில் எரித்து கொன்றனர்.. ஹைதராபாத் போலீஸ் ஷாக் தகவல்டாக்டர் மட்டுமல்ல.. மேலும் 9 பேரை அதே பாணியில் எரித்து கொன்றனர்.. ஹைதராபாத் போலீஸ் ஷாக் தகவல்

பங்களா

பங்களா

வித்யா குண்டாக இருப்பாராம்.. அதனால் உடல் எடை குறைய சிகிச்சை அளிப்பதாக சொல்லி அவரை சென்று திருவனந்தபுரம் அருகே ஒரு பங்களாவில் தங்க வைத்துள்ளனர்.. பங்களாவின் கீழ்பகுதியிலேயே சுனிதாவும் தங்கி உள்ளார். நள்ளிரவில் வித்யாவுக்கு மருந்து என்று மதுவை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர்.

பிளேடு

பிளேடு

மயங்கி விழுந்ததும் இருவரும் சேர்ந்து வித்யாவின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.. சுனிதா நர்ஸ்-ஆக வேலை பார்ப்பதால், ஆபரேஷனுக்கு பயன்படுத்தும் பிளேடால் உடலை துண்டாக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அது தோல்வி அடைந்ததால் உடலை காரில் கொண்டு வந்து வள்ளியூரில் ரோட்டோரம் கிடந்த ஒரு புதர்காட்டில் சடலத்தை வீசி சென்றதாக 2 பேருமே போலீசில் வாக்குமூலம் தந்தனர்.

செல்போன்

செல்போன்

மேலும் போலீசாரை குழப்ப, வித்யாவின் செல்போனை பீகார் செல்லும் ரயிலில் போட்டுவிட்டதாகவும் கடந்த 2 மாசமாக இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, சுனிதாவும், பிரேம்குமாரும் கைது செய்யப்பட்டனர்.

மறு பிரேத பரிசோதனை

மறு பிரேத பரிசோதனை

கடந்த செப்டம்பர் மாதம் முகம் சிதைந்த நிலையில்தான் வித்யாவை போலீசார் மீட்டனர். ஆனால் அவரது சடலத்திற்கு யாருமே உரிமைக்கோரி வராததால் பிரேத பரிசோதனை செய்து வள்ளியூர் போலீசாரால் புதைக்கப்பட்டது. இந்நிலையில் ராதாபுரம் தாசில்தார் செல்வன் முன்னிலையில் கேரள மருத்துவக்குழுவினர் மற்றும் போலீசார் சேர்ந்து வித்யாவின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை செய்தனர்.

English summary
kerala drishyam model woman murder case issue and repost mortem by thirunelveli police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X